வலுக்கும் அமெரிக்கா – சீனா குடுமிப்பிடி சண்டை.. அதோ கதியில் உலக பொருளாதாரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் குடுமிப்பிடி சண்டையால், உலகப் பொருளாதாரம் மிக பின்னடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையானது, முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 

இந்த நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும், பொருட்களுக்கு, மேலும் 5 சதவிகித வரியை அதிகரித்துள்ளார்.

ஏற்கனவே 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்காளுக்கு 25 சதவிகிதமாக வரியை அதிகரித்ததானாலேயே, சீனாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றது. இந்த நிலையில் தற்போது அந்த 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுக்கடுக்கான வரி அதிகரிப்பு

அடுக்கடுக்கான வரி அதிகரிப்பு

இந்த 30 சதவிகித வரி விதிப்பானாது, சீனாவின் குடியரசு தினமான அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும் ஏற்கனவே கூறிய படி 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 10 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், இதே இந்த 10 சதவிகித வரியும், இதே இரண்டாவது தொகுதியாக இந்த பொருட்களுக்கு 15 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனாவுக்கு தக்க பதிலடி

சீனாவுக்கு தக்க பதிலடி

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் முன்னரே தொடர்ந்து அளித்து வந்த ட்வீட்களிலேயே இந்த வரி குறித்தான அறிவிப்புகள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த அறிவிப்புகள் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தின் இந்த வர்த்தகப் போரின் தாக்கம் பற்றிய கவலை அளிப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்த வரி விதிப்பானது, சீனாவின் வரி விதிப்பு பதிலடிகளுக்கு, தக்க பதிலடி கொடுப்பதாகவும் டிரம்ப் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஜின்பிங் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி
 

ஜின்பிங் அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி

இந்த நிலையில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர், ஜெரோம் பவெல், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தவிர அமெரிக்கா நிறுவனங்கள் சீனாவை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறாக இந்த இரு நாடுகளும் மாறி மாறி தங்களை ஒருவரையெருவர் சாடிக் கொண்டு வரியையும் அதிகரித்துக் கொண்டே வருவது, உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பது இந்த நாடுகளுக்கு தெரியாமல் போனது ஏனோ?

அமெரிக்கா பொருட்களுக்கே வரி விதிப்பா

அமெரிக்கா பொருட்களுக்கே வரி விதிப்பா

அமெரிக்கா ஒரு புறம் வரியை அதிகரிக்க, சீனா நான் என்ன சும்மாவா இருப்பேன், இதா வந்துட்டேன் என்று கூறுவது போல், அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் முக்கிய பொருட்களை குறி வைத்து, அதுவும் அரசியல் ரீதியாக தொழில் சாலைகள் முதல் பண்னைகள் வரை குறி வைத்து 75 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்க, சீனா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களே சீனாவுக்கு மாற்று தேடுங்கள்

அமெரிக்க நிறுவனங்களே சீனாவுக்கு மாற்று தேடுங்கள்

இது குறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், எங்களது பெரிய அமெரிக்க நிறுவனங்களே, சீனாவுக்கு மாற்றீட்டை தேடுங்கள் என்றும் நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அது தவிர சீனா பொருட்கள் உங்கள் வீடுகளில் உபயோகிப்பதை தவிர்த்து, அதை உங்கள் நிறுவனங்களில் தயாரிக்க பாருங்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

குடும்பத்திலேயே குழப்பம்

குடும்பத்திலேயே குழப்பம்

சீனா தனது முடிவுகளை மிக மெதுவாக எடுத்து வருகிறது. அதிலும், வர்த்தக ஒப்பந்தம் குறித்த செயல்பாடுகளில் மிக மெதுவாக இருப்பதாக குற்றம் சாட்டிய டிரம்ப், தனது உள்நாட்டில் நிலவும் உள்கட்சி பூசலால் கடுப்பாகியுள்ளார். ஆமாங்க. .. சீனாவுக்காக ஆதரவு தரும் பேசும் பருந்துகளும் தனது அலுவலகத்தில் இருப்பதாக கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது. இந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, பவெல் பதவி விலக விரும்புகிறாரா என்று கேட்டபோது, பவெல் தற்போது பதவி விலக விரும்புகிறாரா? அது தான் அவரின் விருப்பம் என்றால், அதை நான் தடுக்கவில்லை என்றும் அசால்ட் காட்டியுள்ளார் டிரம்ப்.

நம் பெரிய எதிரி யார்?

நம் பெரிய எதிரி யார்?

மேலும் டிரம்ப் நமது மிகப் பெரிய எதிரி பவெல்லா அல்லது ஜி ஜின்பிங்கா என்றும் என்றும் தனது டிவிட்டரில், பவெல்லில் உரைக்கு பின் டிவிட்டரில் கேட்டுள்ளாராம். சரி அப்படி என்ன பவெல் பேசினார் என்று கேட்கிறீங்களா? Jackson Hole ஹாலில் உறையாற்றிய பவெல், டிரம்பின் வர்த்தக கொள்கைகள் அமெரிக்கா மட்டும் அல்லாது உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்றும் மறைமுகமாக டிரம்பை விமர்ச்சித்துள்ளராம். அதான் மனுசன் பொங்கிட்டாரு போல.

நாங்க இங்க கூலா தான் இருக்கோம்

நாங்க இங்க கூலா தான் இருக்கோம்

சீனா 75 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு கட்டணங்களை அதிகப்படுத்துவதாக கூறி வரும் நிலையில், 30 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தைக்கு, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதற்காக ஒன்றும் கவலைப்பட போவதில்லை, நாங்கள் இதற்காக கோபப்படவும் இல்லை, கவலைப்படவும் இல்லை, நாங்கள் இங்கு கூலாக இருக்கிறோம் என்றும் மனுஷன் கூலாக கலாய்த்துள்ளார். கூலாக இருக்கிறோம் என்று கூறும் டிரம்ப் கடுப்பில் இப்படி அடுத்தடுத்த டிவீட் செய்வதை மனுசன் மறந்திட்டாரு போல.

அமெரிக்க நிறுவனங்கள் அதிருப்தி

அமெரிக்க நிறுவனங்கள் அதிருப்தி

வால்மார்ட் இங்க் உள்ளிட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய சில்லறை கூட்டமைப்பு, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், டிரம்பின் கூடுதல் வரி குறித்து எச்சரிக்கை விடுத்ததோடு, நாடு தற்போது இருக்கும் சூழலில், எதிர்கால வணிகங்களை திட்டமிடுவது சரியாக இருக்காது. இது சாத்தியமும் இல்லை என்றும், அரசாங்க விவகாரங்களின் மூத்த துணைத் தலைவர் டேவிட் பிரஞ்சு கூறியுள்ளர்.

அணுமுறையே தெளிவாக இல்லை

அணுமுறையே தெளிவாக இல்லை

மேலும் நிர்வாகத்தின் அணுகுமுறை தெளிவாக செயல்பட வில்லை, வர்த்தக போருக்கான பதில், அதிக வரி அல்ல. அமெரிக்க வணிகங்கள் மற்றும் நுகர்வோரின் நிலை எங்கே போய் முடியும். மேலும் அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் சீனாவுடன் வர்த்தகம் செய்வதைத் தடைசெய்ய ஜனாதிபதிக்கு சட்டபூர்வமாக அதிகாரம் இல்லை. டிரம்பின் இந்த ஆட்டம் செல்லுபடியாகாது என்றும், தற்போது தேசிய பொருளாதார அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் வர்த்தக வழக்கறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சீனா விளையாட விரும்பவில்லை

சீனா விளையாட விரும்பவில்லை

அமெரிக்கா ஒரு புறம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும், மறுபுறம் அதிக சலுகைகளை சீனா கொடுக்கும் என்ற நம்பிக்கையிலேயே அமெரிக்க செல்கிறது. ஆனாலும் எந்த அளவுக்கு அமெரிக்க சீனாவை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறதே, அந்த அளவுக்கு பிரச்சனைகளையும் சீனாவுக்கு உருவாக்குகிறது. இதனால் சீனா திரும்பி சென்று விடுகிறது என்றும், சீனா இந்த விளையாட்டை விளையாட மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் George W. Bushசிடம் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய பிலிப் லெவி கூறியுள்ளார். தற்போது இவர் பிளக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுனராக பணியாற்றி வருகிறார்.

மற்ற நாடுகளின் பொருளாதாரத்தின் கதி?

மற்ற நாடுகளின் பொருளாதாரத்தின் கதி?

ஒரு புறம் அமெரிக்காவும் சீனாவும் குடுமிப்பிடி சண்டை போல் போட்டுக் கொள்வது, மற்ற நாடுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரத்தில் மிக பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில், இந்த பிரச்சனை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இந்த இரு நாடுகளின் சண்டைக்கு, இந்த இரு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மட்டும் அல்லாது, மறுபுறம் பல நாடுகளும் பலிக்கிடா ஆகிக் கொண்டிருப்பதை எப்பதான் இந்த இரு நாடுகளும் உணரப்போகிறதோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump Says Raise Existing Tariffs on Chinese Goods to 30%

Trump Says Raise Existing Tariffs on Chinese Goods to 30%
Story first published: Sunday, August 25, 2019, 8:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X