பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, தற்போது அதிரடியாக ஒரு புதிய திட்டத்தினை கொண்டு வர உள்ளது. ஆன்லைன் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவைப்பட்டுக் கொண்டிருந்த, ஓடிபி என்ற ஒன் டைம் பாஸ்வேர்டு முறை, இனி ஏடிஎம்களில் 10,000 ரூபாய்க்கும் மேல் பணம் எடுத்தாலும் வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது கனரா வங்கி. அதோடு கனரா வங்கி ஏடிஎம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு காரணியாக இருக்கும் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது.

தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகள் நாளுக்கு நாள், தங்களது வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பல சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த வகையில் முன்னதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா யோனோ கேஸ் என்ற ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் முறையை கொண்டு வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, டெபிட் கார்டுக்கு பதிலாக யோனோ அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பல சலுகைகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில் இந்த வங்கி டிஜிட்டல் பணபரிமாற்றத்தை ஊக்குவிக்க, நெப்ட் உள்ளிட்ட பணப் பரிமாற்றங்களுக்கு, கட்டண சலுகை மற்றும் நேர சலுகையும் கொடுத்தது.
இதுதவிர ஏடிஎம் கார்டு உபயோகத்தை குறைக்க யோனோ கேஸ் சேவையையும் அறிவித்தது. நாட்டில் தற்போது 90 கோடி டெபிட் கார்டுகளும், மூன்று கோடி, கிரிடிட் கார்டு'களும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்றும். இந்த டெபிட் கார்டுகளை படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளது என்றும். இதற்கு மாற்றாக யோனோ செயலியை உபயோகிக்க வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ கூறி வருகிறது.
இந்த செயலின் மூலம் புதிதாக வங்கி கணக்கு தொடங்க முடியும். பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், போன்றவற்றை எளிதாகப் பெற இயலும். அதுமட்டுமல்லாது நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது. எனினும் இது குறித்தான முழுமையான தகவலை அறிய https://www.sbiyono.sbi/wps/portal/tnc என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications