இனி இப்படி தான் டீ கிடைக்கும்.. மண் மணம் மாறாமல் மண் குவளைகளில்.. நிதின் கட்காரி தகவல்!

டெல்லி : நாட்டில் ஒரு புறம் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், மறுபுறம் அதற்குண்டான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரபடுத்தி வருகிறது.

இதற்கு உதாரணம், நாடு முழுவதும் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மால்கள், பேருந்து நிலையங்களில் உள்ளிட்ட பல இடங்களில், தேநீர் அருந்தும் டம்ளர்களுக்கு பதில், மண்பாண்டத்தில் செய்யப்பட்ட குவளைகளை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்த வகையில் இந்திய ரயில் நிலையங்களில், விரைவில் மண் குவளைகளில் தேநீர் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மண் குவளை திட்டம்

நாடு முழுவதும் மண் குவளை திட்டம்

அதோடு விரைவில் இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான ரயில் நிலையங்களில், இந்த மண் குவளை திட்டத்தினை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்காக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாவும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

ரயில்வே அமைச்சகத்திடம் வேண்டுகோள்

ரயில்வே அமைச்சகத்திடம் வேண்டுகோள்

இது தவிர, முதற்கட்டமாக 100 முக்கிய ரயில் நிலையங்களில் தேநீர் மண் குவளையில் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் மண் குவளைகளில் தேநீர் வழங்கலாம் என கட்காரி பரிந்துரை செய்துள்ளாராம்.

மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர்

மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர்

இதனால், கிராம பகுதிகளில் உள்ள மண்பானை தயாரிக்கும் தொழில் முனைவோர் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலும் மேம்படுத்தப்படும் எனவும் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதே சமயம் சுடுமண் குவளைகளை தயாரித்து வழங்க காதி கிராம தொழில் கமிஷனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்ற ஆண்டு மண்பானைகளை தயாரிப்பதற்கு உதவும் மின்சார சக்கரங்கள், பத்தாயிரம் மண்பானை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் சக்கரம்

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின் சக்கரம்

அதேபோல, இந்த ஆண்டும் 25,000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மின்சார சக்கரங்கள் வழங்கப்படும் என காதி கிராமத்தொழில் கமிஷன் தலைவர் வினய் குமார் கூறியுள்ளார். ரயில் நிலையங்களில் சுட்ட மண் குவளைகளில் தேநீர் வழங்கும் முறையினை 2004-ஆம் ஆண்டு அப்பொழுது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் துவக்கி வைத்தார். தற்பொழுது வாரணாசி மற்றும் ரேபரேலி ரயில் நிலையங்களில் மட்டும் சுடு மண் குவளைகளில் தேநீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+