பொதுவாக அரசியல் கட்சிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பது வழக்கம், இது நட்பு ரீதியிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ இருக்கும், சில சமயம் வர்த்தக ரீதியிலும் இருக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் முன்னணி 50 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுக்கப் பெரிதும் ஆர்வம் செலுத்தவில்லை. இந்த நிலையிலும் மோடி பெருவாரியாக இடங்களில் பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.
50 நிறுவனங்கள்
2018-19 நிதியாண்டில் நிப்டி 50 நிறுவனங்கள் வெறும் 692.8 கோடி ரூபாய் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்துள்ளது. இதில் பெரும் பகுதி இரு நிறுவனங்கள் மட்டுமே கொடுத்துள்ளது என்பது முக்கியமான தகவல்.
டாடா குழுமம்
மொத்த 692.8 கோடி ரூபாய் தொகையில் பாதிக்கும் அதிகமான தொகையை டாடா குழுமத்தின் டாடா கன்செல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் கொடுத்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களைத் தவிர 14 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளது, மீதமுள்ள 36 நிறுவனங்கள் எவ்விதமான நிதியையும் கொடுக்கவில்லை.
சட்டம் 182
நிறுவன சட்டம் 182இன் படி பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலவிடப்படும் தொகைக்குக் கணக்குக் காட்ட வேண்டும். இதன் படி 2018-19 வரையிலான காலத்தில் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
55,000 கோடி ரூபாய்
2019 தேர்தலுக்குச் சுமார் 55,000 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு உள்ளது, இதில் நிப்டி 50 நிறுவனங்கள் வெறும் 692.8 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது. இதன் அளவு 2014ஆம் நிதியாண்டில் 88.6 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாப் 3 நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் இரு நிறுவனங்கள் இணைந்து 395 கோடி ரூபாயும், அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் 67 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனத்தின் பார்தி ஏர்டெல் 54.2 கோடி ரூபாயும் கொடுத்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெளதம் அதானியின் அதானி போர்ஸ் ஆகிய முக்கிய நிறுவனங்கள் எவ்விதமான அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications