மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியானது, மத்திய அரசின் கவலை கொள்ளும் நிலையினை பார்த்து, அதன் டிவிடெண்ட் மற்றும் கூடுதல் உபரிதொகையை, மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க.. 1,76,051 லட்சம் கோடி ரூபாயை கொடுக்க முன் வந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக் குழு மேற்கொண்டுள்ள பரிந்துரைக் குழுவின், பரிந்துரையை ஏற்று, மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாம்.

இது குறித்து மத்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கி 1,76,051 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது என்றும், இந்த தொகையானது கடந்த 2018 - 2019ம் ஆண்டின் உபரி தொகையான 1,23,414 கோடி ரூபாயும், திருத்தப்பட்ட பொருளாதார மூலதன சட்டகம் அடையாளப் படுத்திய கூடுதல் தொகையானது, 52,163 கோடி ரூபாயும் இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
பொதுவாக இந்த ஆண்டு இந்த உபரி தொகையானது, முந்தைய பரிமாற்றங்களை விட சுமார் இரண்டு மடங்காகும். இதில் ரிசர்வ் வங்கி 50,000 கோடியை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 2016 - 2017ம் ஆண்டில் 30,659 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியிடம் உள்ள இந்த உபரி நிதியை எந்தளவுக்கு மத்திய அரசுக்கு வழங்கலாம் என முடிவெடுப்பதற்காக, முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழு, கடந்த டிசம்பர் மாதமே அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த குழுவானது கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை, ரிசர்வ் வங்கியிடம் அளித்திருந்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது 1.76 லட்சம் கோடி ருபாயை கொடுக்க முன் வந்துள்ளது. மத்திய அரசு தற்போதுள்ள நிலையில் இந்த நிதியானது மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது.
இந்த நிதியின் மூலம் அரசின் நிதிப்பற்றாக்குறையானது கணிசமான அளவு குறையும் என்றும், இதன் மூலம் அதிகளவிலான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியிடம் 9.6 டிரில்லியன் ரூபாய் தொகை இருக்கும் நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி இதை கொடுக்கவுள்ள நிலையில், இது அரசு தற்போது இருக்கும் நிலையில் இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications