ரெட் அலர்ட் கொடுக்கும் வல்லுனர்கள்.. ஆர்பிஐ-யின் இந்த முடிவு சரியல்ல?

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியானது, அதன் உபரி நிதியான 1.76 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பல தரப்பில் இருந்தும், இதற்கு பல விதமான கருத்துகள் நிலவி வருகின்றன.

உண்மையில் இது நன்மையா தீமையா? இதனால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்குமா? இல்லையா? என்றும் பல கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2008 - 2013 வரையில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த துவ்வூரி சுப்பாராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் ஆவர். இவர் கடந்த ஆகஸ்ட் முதல் முதல் வாரத்திலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்டைய நாடுகளை பின் தொடர வேண்டும்

அண்டைய நாடுகளை பின் தொடர வேண்டும்

பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் இருப்புகளில், ஒரு பகுதியை அந்தந்த அரசாங்களுக்கு மாற்றியுள்ளன. ஆனால் இது இந்தியாவை பொறுத்த வரை முற்றிலும் பலன் அளிக்காது என்றும் கூறியுள்ளார். அதுவும் பிமல் ஜலானி தலையிலான குழு, ரிசர்வ் வங்கியிலிருந்து பொருத்தமான மூலதனத்தை அடையாளம் காண்பது மற்றும் அதிகப்படியான இருப்புகளை எவ்வளவு அரசாங்கத்திற்கு மற்றுவது என்பது குறித்தான தனது அறிக்கையை இறுதி செய்யும் கட்டத்தில் இருக்கும் போது, சுப்பாராவின் இந்த கருத்துகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்கிறார் உர்ஜித் படேல்?

என்ன சொல்கிறார் உர்ஜித் படேல்?

கடந்த செப்டம்பர் 2016 முதல் டிசம்பர் 2018 வரையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த கவர்னராக இருந்த உர்ஜித் படேல், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவி காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தார். ஆனால் அவர் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் தான் வெளியேறினார் என்ற கருத்தும் இன்று வரை நிலவி வருகிறது. ஆமாங்க.. இன்று போல் அன்றும் ரிசர்வ் வங்கியில் இருந்து உபரி தொகை மத்திய அரசுக்கு கொடுப்பதில் ஏற்பட்ட கடுமையான விவாதமே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பும் ஆர்.பி.ஐ கொடுத்திருக்கிறதா?

இதற்கு முன்பும் ஆர்.பி.ஐ கொடுத்திருக்கிறதா?

ரிசர்வ் வங்கியில் இருந்து இதற்கு முன்பும் இது போன்ற தொகை கொடுத்திருக்கிறார்களா? என்றால் ஆமாம். தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது தனது உபரி தொகையில் சிறு சிறு தொகையினை மட்டுமே அளித்து வந்த நிலையில் தற்போது தான், இந்த அளவுக்கு மிகப்பெரிய தொகையினை கொடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் இது தான் அதிக தொகை என்றும் கூறப்படுகிறது.

மொத்த இருப்பு எவ்வளவு?

மொத்த இருப்பு எவ்வளவு?

இவ்வளவு தொகையினை மத்திய அரசுக்கு கொடுக்க முன்வந்துள்ள அரசு. பின் எவ்வளவு இருப்பை வைத்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது இல்லையா? கடந்த ஜூன் 2019-வுடன் முடிவடைந்த காலத்தில் 9,57,036 கோடியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் அரசு உபரி தொகையை கொடுத்து வரும் ஆர்.பி.ஐ, தற்போது தான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகையினை கொடுக்க முன் வந்துள்ளது.

 விரால்  ஆச்சார்யாவின் கருத்து என்ன?

விரால் ஆச்சார்யாவின் கருத்து என்ன?

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்த போதே இவரும் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரும் தனது தனிப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் உபரி இருப்பு தொகையினை, அரசுக்கு மாற்றம் செய்வது குறித்து எச்சரித்திருந்தாராம். அதிலும் மத்திய வங்கி சுதந்திரத்தை மதிக்காத அரசாங்கங்கள் விரைவில், நிதிச் சந்தைகளில் அதன் எதிரொலியை ஏற்படுத்தும் என்றும், இது பொருளாதார நெருப்பைப் பற்ற வைக்கும் என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+