இனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்?

இன்றைய காலகட்டத்தில் எது எப்போது நடக்கும் என்றும் யாராலும் எதுவும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு உதவுவது இன்சூரன்ஸ் மட்டுமே. அதிலும் நல்லா சம்பாதிக்க வேண்டும், நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் பல நோக்கங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் நாம், எதிர்பாராத விதமாக நமக்கு ஏதேனும் நேர்ந்தால், நமது குடும்பத்தின் நிலை?

இதை படிக்கும் யாரையும் பயப்படுத்தும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை. நாம் இல்லையெனினும் நமது குடும்பமாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை சொல்கிறோம்.

இனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்?

விஜய் நல்ல தனியார் வேலையில் இருப்பவர். மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வாங்கக் கூடியவர். அவரது மனைவி ஹவுஸ் ஓய்ஃப், பள்ளிக்கு செல்லும் இரண்டு குழந்தைகள். வயதான அப்பா, அம்மா, இதய நோயாளியான தந்தைக்கு மாதம் கண்டால் குறிப்பிட்ட செலவு.

எதிர்பாராத விதமாக விஜய்க்கு, உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக தனது நண்பன் சத்யாவை காண்கிறார். ஹாய் சத்யா எப்படி இருக்கீங்க? நான் நன்றாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க என்று சத்யா கேட்க? என்னத்த சொல்ல? ஏதோ இருக்கேன் என்று கூறுகிறார். என்ன விஜய் என்ன ஆச்சு? ஏன் இப்படி விரக்தியா பேசுறீங்க? என்று கேட்ட போது, சத்யா எனக்கு இரண்டு மாசமா உடம்பு சரியில்லை, குழந்தைகள் ஸ்கூல் பீஸ், அப்பா, அம்மா மருத்துவ செலவு, வீட்டுச் செலவு பற்றாக்குறைக்கு எனது உடல் நிலையும் சரியில்லை, 2 லட்சம் செலவு. இந்த நிலையில் இரண்டு மாத சம்பளம் இல்லை என்றும் புலம்புகிறார்.

ஏன் என்ன ஆச்சு விஜய், நீங்க ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளவில்லையா? ஹெல்த் இன்சூரன்ஸா? எதற்கு அதை வாங்கனும்? உங்கள் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், வருடம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலுத்தினால் போதுமே, 5- 6 லட்சம் மதிப்புடைய ஒரு குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் பெற்று இருந்தால், 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது, மொத்தச் செலவையும் காப்பீட்டு நிறுவனமே செலுத்தியிருக்குமே. அப்படியா? இது எனக்குத் தெரியாமல் போச்சே சத்யா?.

சரி, விஜய் கிரிட்டிக்கல் இல்னஸ் இன்சூரன்ஸ் பற்றித் தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சிறிய அறுவைச் சிகிச்சை செய்தார்கள் தெரியுமில்லையா? அதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகியது. நான் இந்த கிரிட்டிகல் இல்னஸ் இன்சூரன்ஸ் போட்டிருந்ததால், அது சரியான நேரத்தில் எனக்கு கைகொடுத்தது.

சரி இனியாவது தெரிந்து கொள்? நான் தற்போது வீட்டுக்கடனாக 50 லட்ஸ்ம் வாங்கியுள்ளேன். ஒருவேளை இந்தக் கடனை அடைக்கும் முன்பு நான் இறக்க நேர்ந்தால் அந்தக் கடனை யார் அடைப்பார்கள்? பிள்ளைகள் படிப்பார்களா, எனது மனைவிக்கும் என்ன செய்வார்? எனது அப்பா அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள். அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் அல்லவா? இப்படித் தற்செயலாக ஒரு இழப்பு ஏற்படும்போது உதவும் என்றும் ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியுள்ளேன்.

அட என்ன சத்யா? இப்படி சொல்றீங்க? விஜய், இந்தப் பாலிசி எடுத்துள்ளதால் ஒருவேலை நான் இல்லை என்றாலும் 1 கோடி ரூபாய் எனது மனைவிக்குக் கிடைக்கும். அதை வைத்துக் கடனை அடைப்பது மட்டும் இல்லாமல் எனது பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியும் இல்லையா? அதோடு எனது அப்பா அம்மாவையும் பார்த்துக் கொள்ளமுடியும். இன்றிலிருந்து நீங்களும் இன்சூரன்ஸ் எடுங்கள்..

அதுமட்டும் அல்ல, தனிநபர் விபத்துக் காப்பீடு, வாகனக் காப்பீடு, மூன்றாம் நபர் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ் என பலவகை இன்சூரன்ஸ்கள் இருக்கின்றன. இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+