பிவி சிந்து டபுள் குஷி.. இனி ஒரு விளம்பரத்திற்கு ரூ.3 கோடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் தங்க மங்கை எனப் போற்றப்படும் அளவிற்குத் தொடர்ந்து தங்க மெடல்களைக் குவித்து வருகிறார் பேட்மிண்டன் சேம்பியன் பிவி சிந்து. சமீபத்தில் BWF வோர்ல்டு சம்பியன்ஷிப் போட்டியில் தங்க வென்ற முதல் இந்தியப் பெண் எனப் பெருமை பெற்றுள்ளார்.

 

இந்த வெற்றியின் மூலம் இனி வரும் காலத்தில் அவருடைய பிராண்ட் மதிப்பு இரட்டிப்பாகும் என முன்னணி விளையாட்டுத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

3 கோடி ரூபாய்

3 கோடி ரூபாய்

பிவி சிந்துவின் இந்த வெற்றி மூலம் அவர் விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மத்தியிலான பிராண்ட் மதிப்பு மற்றும் பிராண்ட் கட்டணம் தற்போது இருக்கும் 1-1.5 கோடி ரூபாயில் இருந்து குறைந்தபட்சம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் இவரின் பிராண்ட் மதிப்பு 3 கோடி ரூபாய் வரையில் உயரும் எனப் பேஸ்லைன் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் துகின் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

பெண் விளையாட்டு வீரர்

பெண் விளையாட்டு வீரர்

இந்தியாவில் பல பெண் விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் பிராண்ட் மதிப்பு மற்றும் பிற காரணிகளைப் பார்க்கும் போது பிவி சிந்து தான் வர்த்தக ரீதியில் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த 3 வருடத்தில் இவர் அடைந்த வெற்றிகள் இவருடைய பிராண்ட் மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

 

 14 டீல்
 

14 டீல்

இதுவரை பிவி சிந்து 14 பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். யோனக்ஸ், ஜேபிஎல், பிரிட்ஜ்ஸ்டோன், மூவ், பாங்க் ஆஃ பரோடா மற்றும் Gatorade ஆகிய பிராண்டுகள் இதில் அடக்கம். இந்த 14 டீல்களின் மொத்த மதிப்பு 40 கோடி ரூபாய் ஆகும்.

4 வருட டீல்

4 வருட டீல்

கடந்த பிப்ரவரி மாதம் பிவி சிந்து சீன விளையாட்டு பிராண்டு நிறுவனமான Li-Ning உடன் பிரத்தியேகமாக 4 வருட டீல்-ஐ செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ்

போர்ப்ஸ்

சுமார் 5.5 மில்லியன் டாலர் வருமானத்துடன் இருக்கும் பிவி சிந்து உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளதாகப் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: advertisement
English summary

Sindhu's brand fee expected to double to ₹3 crore

PV Sindhu's annual brand fee is expected to double from ₹1-1.5 crore to ₹3 crore, said Tuhin Mishra, MD of Baseline Ventures, which manages her. She became the first Indian to win gold at the BWF World Championships. The off-court earnings of Sindhu, who currently endorses 14 brands, trail only Virat Kohli among the country's top sportspersons, Mishra added.
Story first published: Wednesday, August 28, 2019, 7:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X