அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது ஆன்லைன் சேவையை விரைவில் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளது.
ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது மொத்த வர்த்தகத்தில் குறிப்பிட்ட வருவாயை ஸ்மார்ட்போன் விற்பனையிலேயே பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஆன்லைன் விற்பனை ஆரம்பிக்க உள்ளதாகவும், முக்கிய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல் இந்தியாவின் புதிய விதிமுறைகளூம், உலக அளவில் வளர்ச்சி கண்டு வரும் ஸ்மார்ட்போன் சந்தைகளை ஈர்க்கும் விதமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா சீனா உறவுகளை பதம் பார்த்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா தனது முதலீட்டு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இது பெரும்பகுதியான அன்னிய நிறுவனத்திற்கு ஊக்கத்தை அளிக்ககூடும் என்றும், இது நாட்டில் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கிறது, இது மாற்று சங்கிலியை உருவாக்குவதன் மூலம், சீனா மீதான அதன் அதிக சார்பு நிலையை குறைக்க இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் குபேர்டினோ, கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தனது உற்பத்தி பொருட்களான ஆப்பிள் ஐபோன், ஐபேடு, மேக் கம்பியூட்டர்ஸ், உள்ளிட்ட பல சாதனங்களை கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் தனது ஆன்லைன் சேவையை துவக்க உள்ளது என்றும், குறிப்பாக மும்பையை தளமாகக் கொண்டும் இந்த ஆன்லைன் விற்பனை செய்யவுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் சிறிய பங்கினை கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிகளவிலான விலை, மற்றும் இறக்குமதி வரி அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே ஆன்லைன் விற்பனையை அதிகளவில் பல நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.
நாட்டில் ஸ்மார்ட்போன் மொத்த விற்பனையில் ஐந்தில் ஒரு பங்கு ஆன்லைன் விற்பனை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அமேசான், பிளிப்கார்டு மூலமாக தனது விற்பனையை செய்து வரும் ஆப்பிள், தற்போது நேரிடையாகவே ஆன்லைன் விற்பனையில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில்லறை விற்பனையிலும் சரி, ஆன்லைன், ஆஃப்லைன் விற்பனையிலும் தற்போது நேரிடையாக குதிக்க திட்டமிட்டுள்ளது. அதிலும் 1.3 பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவே, எங்களுக்கு சிறந்த சந்தை என்றும் கூறியுள்ளதாம் ஆப்பிள்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications