மும்பை : நாளுக்கு நாள் இந்தியாவின் பொருளாதார நிலை மந்தமாகி கொண்டே வரும் நிலையில், பல துறைகள் வீழ்ச்சியைக் கண்டு கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.7 சதவிகிதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியா ரேட்டிங்ஸ் மட்டும் முன்னரே பல அறிக்கைகள் இது போன்றே தொடர்ந்து வளர்ச்சி குறையும் என்றும் தொடர்ந்து அறிக்கை கொடுத்து வருகின்றன.
அதிலும் நடப்பு ஆண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, 6.7 சதவிகிதாமாக குறைத்து மதிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி தொடர் வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் மந்தமான நிலை, மக்களின் தேவை மற்றும் நுகர்வு திறன், முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி விகிதத்தை முன்பு கணித்ததிலிருந்து தற்போது குறைத்து அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளாக இந்த வளர்ச்சி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் காலாண்டு அடிப்படையிலும் இந்த வளர்ச்சி விகிதமானது கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஐந்து காலாண்டுகளிலும் வளர்ச்சி குறைந்து, 5.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வீழ்ச்சிக்கு என்ன காரணம்
இந்த உற்பத்தி வளர்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், குறிப்பாக தொழில் துறை வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் தொடர்ச்சியான மந்த நிலை, நுகர்வில் சரிவு, தேவையில் ஏற்பட்டிருக்கும் சரிவு நிலை, தாமதமான சீரற்ற மழைக்காலம்(பருவமழை), முதலீடுகள், குறிப்பாக தனியார் முதலீடுகள் வெகுவாக குறைந்துவிட்டன, அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியார் மற்றும் கார்ப்பரேட் துறைகளில் மந்தமான முதலீடு உள்ளிட்ட பல காரணங்கள், இந்த வளர்ச்சி குறைய காரணங்களாக அமைந்து விட்டன.
மூடிஸ் நிறுவனம் என்ன சொல்கிறது?
இதே போல சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் குறைத்து மதிப்பிட்டுள்ளது. இது முன்னர் 6.8 சதவிகிதமாக நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நடப்பு நிதியாண்டில் இருக்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பல நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இது அடுத்த நிதியாண்டில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கைகள்
நடப்பு நிதியாண்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த வாக¬னத் துறை, அன்னிய முதலீடுகளை அதிகரிக்க பல சலுகைகள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நிதித் துறை சம்பந்தமான பல அதிரடி நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார், எனினும் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வர சில காலமாகும். ஆக நடப்பு நிதியாண்டின் மிதமான வளர்ச்சியே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக்கு வழங்கப்படும் உபரி தொகை
தற்போது ரிசர்வ் வங்கியின் உபரி தொகையில் 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு வழங்குவதன் மூலம், அரசு பொருளாதார வளர்ச்சி மேம்பட இந்த தொகையினை பயன்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நிதிபற்றாக்குறை 3.3 சதவிகிதம் அளவில் இருக்கும் என்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இருக்கும் என்றும் உள்ளது.


Click it and Unblock the Notifications