மும்பை : கடன் பிரச்சனையில் பலவித பிரச்சனைகளை மேற்கொண்ட ஜெட் ஏர்வேஸ் ஒரு கட்டத்தில் சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலையில் தனது சேவையினை முழுவதுமாக நிறுத்தியது.
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸூன் கடன் வழங்குனர்கள் எஸ்.பி.ஐ தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை தொடர்ந்து விற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில், இது வரை சரியான படி யாரும் ஆர்வம் தெரிவித்ததாக தெரியவில்லை.
ஆரம்பத்தில் பலர் ஆர்வம் காட்டினாலும், பின்னர் பின்வாங்கியதே உண்மை. இந்த நிலையில் தற்போது தென் அமெரிக்காவைச் சேர்ந்த சினெர்ஜி குழுமம், ஜெட் ஏர்வேஸின் 49 சதவிகிதம் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸ் கடன் வழங்குனர்களுடன் பேச்சு வார்த்தை
தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக அவியான்கா ஏர்லைன்ஸில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் சினெர்ஜு குழுமம், கடன் பிரச்சனையால் தரையிறங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 49 சதவிகித பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்தான பேச்சு வார்த்தைக்கு, அடுத்த மாதம் இந்த நிறுவனத்தின் நிறுவனர், ஜெர்மன் எஃப்ரோமோவிச் இந்தியா வரவிருப்பாதாகவும், ஜெட் ஏர்வேஸ் குறித்தான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அதிலும் ஜெட் ஏர்வேஸின் கடன் வழங்குனர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடன் வழங்குனர்கள் கடனை ஈக்விட்டியாக மாற்ற தயாராக இருப்பார்கள்
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 49 சதவிகித பங்குகளை கொண்ட வெளி நாட்டு நிறுவனமாக கையகப்படுத்துதலை கட்டமைக்க நாங்கள் விரும்புகிறோம், மேலும் இதன் கடன் வழங்குனர்கள் தங்கள் கடனை ஈக்விட்டியாக மாற்ற தயாராக இருப்பார்கள் என்றும் நம்புகிறோம். இது தவிர உள்கட்டமைப்பு துறை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சினெர்ஜிக்கு ஆலோசனை
ஜி&ஏ நிறுவனத்தில் தலைவர் Antonio Guizzetti, சினெர்ஜி குழுமத்திற்கு பல ஆலோசனை கூறிவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பண நெருக்கடியால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ், சுமார் 30,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடனை பெற்றுள்ளதும், இதில் 12,000 கோடி ரூபாய் உரிமை கோரல்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பல பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும்
கடந்த 2004ல் திவால் நிலைக்கு செல்லப்பட்ட அவியான்கா நிறுவனத்தை வாங்கிய சினெர்ஜி குழுமம்,என்று வாங்கியதோ அன்றிலிருந்தே, தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எப்படி எனினும் இந்த நிறுவனத்தை வாங்க, இவர் பலத்த பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஏற்கனவே அவியான்கா நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போதே, பல பிரச்சனைகளை கடந்த நிறுவனருக்கு, இது பெரிய பிரச்சனையாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications