மும்பை : டாடா ரியால்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம், வணிக ரீதியான திட்டங்களில், பூனே மற்றும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் 1,200 கோடி ரூபாய் முதல் 1,400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் 12 மில்லியன் சதுர அடி அளவிலான, தகவல் தொழில் நுட்ப கட்டிடங்களை இந்த மூன்று நகரங்களிலும் கட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர நடுத்தர மக்களும் வாங்கும் அளவுக்கு 40 லட்சம் மதிப்பிலான நடுத்தர வீடுகளும் கட்டிக் கொண்டிருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர இன்னும் விலை குறைவான வீடுகளை கட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வகையில் இன்னும் 6 திட்டங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்
ஏற்கனவே இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் நாங்கள் 15 நகரங்களுடன் இணைந்துள்ளோம். இப்போது அதிகளவிலான வணிகத்தையும் சேர்த்துள்ளோம் என்றும், இதில் பல ஆபத்துகள் இருப்பதும் எங்களுக்கு புரிகிறது என்றும், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சஞ்சய் தத் கூறியுள்ளார்.
நவி மும்பையில் கன்சோலி என்ற இடத்தில், 47 ஏக்கர் நிலப்பரப்பில் 7 மில்லியன் சதுர அடியில், வணிக பூங்கா ஒன்றை கட்டும் பணியில் இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் டாடா ரியால்டி நிறுவனம் அதன் பங்குதாரரான ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பிரைவேட் ஈக்விட்டியுடன் இணைந்து, 325 கோடிக்கு நிலத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா ரியால்டி நிறுவனத்தின் தலைவர், தற்போது 40 லட்சத்துக்கும் குறைவான வீடுகளை இந்த நிறுவனம் கட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த வீட்டு வணிக தொழிலில் பெரிய மாற்றத்தைக் கண்டு வருவதாகக் கூறிய தத், விரைவில் இந்த திட்டத்தை முடிக்க உள்ளதாகவும், இனி 40 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வீடுகளை இனி கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது 15 நகரங்களில் தனது திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், இனி மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி, என்.சி.ஆர் போன்ற ஆறு முக்கிய நகரங்களுக்கு கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications