டெல்லி: டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது இந்திய வங்கிகள் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதில், வங்கிகள் இணைப்பு மிகவும் முக்கியமான விஷயமாக பேசி இருக்கிறார்.
குறிப்பாக இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 27 வங்கிகளாக இருந்த வங்கிகள் அனைத்து முறையாக திட்டமிட்ட படி இணைக்கப்பட்டால் இந்தியாவில் இனி 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் எனவும் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

எந்த வங்கிகள், எந்த வங்கிகள் உடன் இணைக்கப்படுகிறது என்கிற விஷயத்தைக் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருக்கிரோம். இருப்பினும், ஏர்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா குழும வங்கிகள் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க், தேனா பேங்க் இணைக்கப்பட்டது.
இந்த இணைப்பினால் நமக்கு என்ன நன்மை கிடைத்தது என ஒரு தனி ஸ்லைட் போட்டு விளக்கி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வங்கிகள் இணைப்பால்
1. நிறைய சேவைகள் வழங்க முடிந்து இருக்கிறது
2. வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற் போல சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
3. இன்னும் சிறப்பாகச் செயல்பட முடிந்து இருக்கிறது
4. ஊழியர்களுக்கு என்ன சிறப்பாக செய்ய முடியுமோ, அவைகள் நன்றாக செய்ய முடிந்திருக்கிறது
5. நிறைய அலுவலகம் பணிகள் சார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, வியாபாரம் பார்க்க வைத்திருக்கிறது.
6. சில்லறை வியாபாரம் ஜூன் 2018-ல் 93,000 கோடி ரூபாயில் இருந்து, ஜூன் 2019-ல் 1,12,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
7. காஸா விகிதம் ஜூன் 2018-ல் 2.69 லட்சம் கோடி இரூபாயில் இருந்து ஜூன் 2019-ல் 2.87 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
8. மார்ச் 2019-ல் மூன்று வங்கிகளும் சேர்த்து 7,113 கோடி ரூபாயை நட்டம் காட்டினார்கள். தர்போது ஜூன் 2019 கலாண்டில் 710 கோடி ரூபாய் லாபம் காட்டி இருக்கிறார்கள்.
8. மூன்று வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின் அதன் சந்தை மதிப்பு வரும் ஆகஸ்ட் 2020-க்குள் சுமார் 51,000 கோடி ரூபாயைத் தொடும் என்கிற ப்ளூம்பெர்க்கின் கணிப்பைக் குறிப்பிட்டு இருக்கிறார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆக இதே போல எல்லா வங்கிகளும் இணைந்து நல்ல லாபத்தில் இயங்கும் என எதிர்பார்க்கிறது அரசு. நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கு நல்லது நடந்தால் சரி தான் மேடம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications