டெல்லி : பொருளாதாரத்தை தொடர்ந்து வலுபடுத்த பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிர்மலா சீதாராமன், பல பொதுவரை வங்கிகளை இணைப்பதாகவும் இன்று பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.
இந்த இணைப்புக்கு பிறகு, கடந்த 2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில், இனி 12 பொதுத்துறை வங்கிகளாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அதிகப்படியான செலவினங்கள் குறைக்கப்படும் என்றும், இந்த வங்கிகள் முன்பைவிட நல்ல முறையில் செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார்.
இது பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய ஏதுவாக அமையும். இதற்கு வங்கிகளும் தங்களது பணியை அர்பணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இணைக்கப்படுகிறது. இவைகள் 17.5 லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன், நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போதுள்ள அளவைவிட, 1.5 மடங்கு இது பெரியதாகும். இந்த இணைப்பின் மூலம் நாடு முழுக்க 11,437 கிளைகள் கொண்ட வங்கியாக இது உருவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது. இது தவிர யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்பொரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும், இந்தியன் வங்கி- அலகாபாத் வங்கியுடன் இணையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு வங்கிகள் இனைக்கப்படுவதன் மூலம் கடை வழங்கும் அளவும், எண்ணிக்கைகளும் உயரும், இதோடு, இதனால் வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இதனால் நன்மை கிடைக்கும். மேலும் இதனால் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications