வளர்ந்து வரும் நாடான இந்தியா சீனாவை விட அதிகளவிலான குக்கிங் நிலக்கரியை அடுத்த 2025க்குள் அதிகளவு இறக்குமதி செய்யும் என்றும், ஃபிட்ச் சொயூஷன்ஸ் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தவிர 2019 முதல் 2028ஆம் ஆண்டுக்கு இடையில் இந்த இறக்குமதி வளர்ச்சியானது ஆண்டுக்கு சராசரியாக 5.4 சதவிகிதமாக வளர்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. இதே சமயம் இதற்கு சமமான ஸ்டீல் உற்பத்தியிலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக அடுத்த 2025ம் ஆண்டிற்குள் இந்தியா, சீனாவை விட அதிகளவிலான குக்கிங் நிலககரியை இறக்குமதி செய்யும் என்றும் ஃபிட்ஸ் கணித்துள்ளது. இந்த நிலையில் உலகளவில் அதிகளவு நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என்றும் கூறப்படுக்கிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2017ம் ஆண்டில் நிலக்கரி இறக்குமதி சீனாவை விட பாதி தான் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒட்டுமொத்த சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்தினாலும், கடலோர தேவையைப் பொறுத்தவரை இந்தியா தான் அதிகளவு இறக்குமதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா அதிகளவு நிலக்கரியை ஆஸ்திரேலியாவில் இருந்தே இறக்குமதி செய்கின்றது. இந்த வகையில் நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நிலக்கரி இறக்குமதி 25.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே மிக முக்கிய இறக்குமதியாளரான சீனா முன்பிருந்த இறக்குமதியை விட 8.8 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகளாவிய அளவில் வரவிருக்கும் ஆண்டுகளில், நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் 3ல் இரண்டு பங்கு, சீனாவே ஆதிக்கம் செலுத்தும் என்பதால், நாட்டில் சுரங்கம் மற்றும் ஸ்டீல் துறையில் விலைகளில் சீனாவே ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
எப்படி எனினும் சீனாவில் முன்பு போல் இருக்கவும் தனது தொழில் துறையை ஊக்குவிக்கவும் சில காலம் எடுத்துக் கொள்ளும். இந்த நிலையில் தொழில் துறையும் சீரமைக்க சில காலம் ஆகும் என்பதால், சீனாவில் இந்த நடுத்தர காலத்தில் ஸ்டீல் உற்பத்தி மற்றும் கட்டட துறையும் தடுமாறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தக் காலத்தில் நிலக்கரி நுகர்வு குறையும் என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த நிலையில் சீனாவையே இந்தியா விஞ்சலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications