இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கம்பீரமாக வங்கிகள் இணைப்பைப் பற்றிப் பேசினார்.
ஆனால் இப்போது இந்தியப் பொருளாதாரம் குறித்து ஜிடிபி தரவுகள் நமக்கு அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கின்றன.
2019 - 20 நிதி ஆண்டுக்கான, 2019 ஏப்ரல் - 2019 ஜூன் காலாண்டு காலத்துக்கான, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி வெறும் 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டு அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்து இருக்கிறது.
சரிவு
கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் மார்ச் 2019 காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபி 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவு தான் இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த 2018 - 19 மொத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 6.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது.
உற்பத்தி, சுரங்கம், விவசாயம்
துறை வாரியாகப் பார்த்தோமே ஆனால் உற்பத்தித் துறை கடந்த ஜூன் 2018 காலாண்டான ஜூன் 2019-ல் 12.1 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. சுரங்கம் மற்று குவாரி துறை கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 0.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 2.7 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. விவசாயம், காடு சார்ந்த வேலைகள், மீன் பிடித் தொழில் போன்ற துறைகளில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 2.0 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
மின்சாரம் முதல் ஹோட்டல் வரை
மின்சாரம், கேஸ் நீர் பகிர்மானம் மற்றும் பல சேவைகள் துறையில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 8.6 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 7.1 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
கட்டுமானம், நிதி, ரியல் எஸ்டேட்
கட்டுமானத் துறையில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.6 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 5.7 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் ப்ரொஃபெஷனல் சேவைகள் துறையில் கடந்த ஜூன் 2018 காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஜூன் 2019-ல் 5.9 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications