சாலைகள் விரிவாக்கத்தை நிறுத்துங்கள்.. செலவுகள் அதிகம் வேண்டாம்.. மோடி வேண்டுகோள்!

டெல்லி: நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், பிரதமர் மோடி, மாநில ரோடு அமைப்பாளர்களிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 7 மடங்கு கடன் அதிகரித்துள்ளதாகவும், இதனால் சாலைகள் விரிவாக்கத்தை நிறுத்துங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளராம்.

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் பிரதம மந்திரி அலுவலகம் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிடப்படாத மற்றும் அதிகப்படியான சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது.

இது அதன் கட்டுமான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் இதனை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

முன்னர் மோடியால் பாராட்டப்பட்டது

முன்னர் மோடியால் பாராட்டப்பட்டது

மேலும் இந்த கடிதத்திற்கு ஒரு வாரத்திற்குள் நெடுஞ்சாலை துறை பதிலளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் மோடி முதல் முறை பதவியில் இருந்த போது, தற்போது இருக்கும் நிலைக்கும் தலைகீழ் மாற்றமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நெடுஞ்சாலை துறையில் கட்டுமான வேலை, மோடி நிர்வாகத்தால் பாராட்டப்பட்ட போது, இது இந்தியாவை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்ற உதவியது என்றும் கூறியிருந்தார்.

பொருளாதார நெருக்கடி அதிகம்

பொருளாதார நெருக்கடி அதிகம்

தற்போதுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது பட்ஜெட் பற்றாக்குறையை கட்டுபடுத்த விரும்பும் நேரத்தில், நிதி உதவிக்காக நெடுஞ்சாலை துறை அரசிடம் நிற்கும் நிலை உள்ளது. அதிலும் பொருளாதார பிரச்சனை தலைவிரித்தாடும் இந்த நிலையில் இதற்காக தொகை செலுத்துவது என்பது ஆகா நிலையில், மோடி தலைமையிலான அரசு இவ்வாறு கூறியுள்ளது என்றும், அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம்

வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம்

சாலைகள் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவது, இந்தியாவைப் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான மோடியின் இலக்கைத் தடுக்கிறது. ஏனெனில் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம். சாலைகள் என்பது முக்கியமான உள்கட்டமைப்பு ஆகும். இதை நிறுத்துவது என்பது நெடுஞ்சாலைத்துறையை கட்டுமானத்தின் மந்த நிலைக்கு மட்டும் அல்லாமல், அதைச் சார்ந்திருக்கும் பிற துறைகளுக்கும் வழி வகுக்கும் என்றும், மற்றொரு புறம் எச்சரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தம்

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தம்

இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பிற்கான முதலீடுகளுக்கும் இடையே ஒரு வலுவாக தொடர்பு உள்ளது. அதிலும் ஒட்டுமொத்த மதிப்பில் சுமார் 3.1 சதவிகிதம் சாலைகள் உள்ளன என்றும், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த ஆண்டு ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தின் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மெதுவான வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+