நவம்பர் 08, 2016 அன்று இரவு பிரதமர் மோடி தொலைக்காட்சி சேனலில் தோன்றி புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனச் சொன்னார்.
அதற்குப் பெயர் டீமானிட்டைசேஷன் எனச் சொன்னார்கள். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து சுமாராக மூன்று வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் பெரிதாக மாற்றங்கள் இல்லை.
அதற்கு சிறந்த உதாரணமாக, ஆர்பிஐயின் ஒரு நடவடிக்கையை நம்மால் சொல்ல முடியும். அது தான் பணத்தை அச்சடிப்பது.
பணம் அச்சடிப்பது
டீமானிட்டைசேஷன் காலத்துக்கு முன் எவ்வளவு பணம் அச்சடிக்கப்பட்டதோ, அதை விட கூடுதலாக பணம் தற்போது அச்சடிக்கப்பட்டு வருகிறது. ஆர்பிஐ சார்பாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனமும், செக்யூரிட்டி ப்ரிண்டிங் & மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்கிற நிறுவனமும் தான் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வருகிறார்கள்.
எவ்வளவு
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் 2,919 கோடி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து இருக்கிறார்கள். இதன் மதிப்பு 7.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. டீமானிட்டைசேஷன் காலத்துக்கு முன் 2015 - 16 நிதி ஆண்டில் 2,119 கோடி நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. அதன் மதிப்பு 3.83 லட்சம் கோடி ரூபாய். அதற்கு முந்தைய 2014 - 15 நிதி ஆண்டில் மட்டும் 2,365 கோடி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து இருக்கிறார்களாம். இதன் மதிப்பு 7.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
கூடுதல் பணம்
ஆக கூடுதலாக பணத்தை அச்சிட்டு இருக்கிறார்கள். ஆனால் பணப் புழக்கம் அதிகரித்து இருக்கிறதா..? எனக் கேட்கிறீர்களா..? ஆம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவில் பணப் புழக்கம் 21.10 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் 2015 - 16 நிதி ஆண்டில் 16.41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த புதிய 2,000 ரூபாய் நோட்டினால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா..?
விலை குறைவு
இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் செலவு பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 4,811 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்து 2,919 கோடி ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து இருக்கிறார்கள். ஆனால் 2016 - 17 நிதி ஆண்டில் 2,904 கோடி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க 7,965 கோடி ரூபாயை செலவழித்து இருக்கிறார்கள்.
சரி ஒரு நோட்டுக்கு எவ்வளவு
| 2000 ரூபாய் நோட்டு | 2017 - 18-ல் ரூ.4.18 | 2018 - 19-ல் ரூ.3.53 |
| 500 ரூபாய் நோட்டு | 2017 - 18-ல் ரூ.2.39 | 2018 - 19-ல் ரூ.2.13 |
| 200 ரூபாய் நோட்டு | 2017 - 18-ல் ரூ.2.24 | 2018 - 19-ல் ரூ.2.15 |
| 100 ரூபாய் நோட்டு | 2017 - 18-ல் ரூ.1.50 | 2018 - 19-ல் ரூ.1.34 |
| 50 ரூபாய் நோட்டு | 2017 - 18-ல் ரூ.0.83 | 2018 - 19-ல் ரூ.0.82 |
இப்படி 3.53 ரூபாய் கொடுத்தால் ஆர்பிஐ மட்டுமே 2,000 ரூபாய் கொடுக்க முடியும். மற்றவர்கள் கொடுத்தால் சிறைக்குச் செல்ல வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications