இந்திய வங்கிகள் அமைப்பானது கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 71,500 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி மோசடிகளை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக 90 சதவிகித மோசடிகள் பொதுத்துறை வங்கிகளில் தான் நடந்துள்ளதாகவும், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த நிலையில் மோசடிகள் மூலம் கிட்டதட்ட 71,500 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வேடிக்கை என்னவெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த அறிக்கையில், பொதுத்துறை வங்கிகளுக்கு, அவற்றின் ஆரோக்கியத்தை புதுபிக்கும் வகையில், 71,000 கோடி மூலதனமாக ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் வங்கிகளில் இதைவிட அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோசடி அதிகரிப்பு
குறிப்பாக கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் வங்கி மோசடி எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையின் அளவும் 73.8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.அதிலும் கடந்த 2019ம் நிதியாண்டில் 3,766 மோசடிகள் நடந்துள்ளதாகவும், அதுவும் இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகரித்தும் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் ஏற்பட்ட நஷ்டமானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 80 சதவிகிதம் அதிகமாகும்.
இதில் எல்லாம் மோசடியா?
கடந்த பிப்ரவரி 2018ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில், வராலாற்றில் இது ஒரு முக்கிய மோசடியாகவும் கருதப்படுகிறது. கடந்த வியாழக்கிழமையன்று தனது ஆண்டறிக்கையினை வெளியிட்ட ஆர்.பி.ஐ, அதில் 2018-19-ம் நிதியாண்டில் இண்டர்நெட், கார்டுகள் மற்றும் இருப்புத் தொகை தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை 0.3 சதவிகிதம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி கம்மிதான்
மேலும் 1 லட்ச, ரூபாய்க்கு குறைவாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 0.1 சதவிகிதம் என்றும் அறிவித்துள்ளது. இதே 2018-19-ம் ஆண்டு வரையிலான 55 மாதங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்ட தொகை 52,200 கோடி ரூபாய் என்றும், இந்த 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வங்கி மோசடிகள் குறித்த அறிக்கையை தயாரிக்க வங்கிகள், 4½ ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் அதிகப்படியான மோசடி
இதில் ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணங்கள் மூலமே அதிகப்படியான வங்கி மோசடிகள் நடந்துள்ளன என்றும், தற்போது பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து வங்கி மோசடிகளை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications