வார்னிஷ் அடிக்கப்பட்ட ரூ.100 நோட்டு விரைவில் அறிமுகம்.. அப்படி இதில் என்ன ஸ்பெஷல்..!

2018-19ஆம் நிதியாண்டின் ரிசர்வ் வங்கி வருடாந்திர அறிக்கையில், ரிசர்வ் வங்கி விரைவில் மக்களின் புழக்கத்திற்காக வார்னிஷ் பூசப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தற்போது முதற்கட்ட சோதனையாக அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனால் என்ன நன்மை..?

வார்னிஷ் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

வார்னிஷ் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

ஜூலை 1, 2018 முதல் ஜூன் 30, 2019 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கி பாதுகாப்பான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக 4,811 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, இதுவே கடந்த வருடம் 4,912 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதுகாப்பு விடயங்களின் ஒரு பகுதியாகவே இந்த வார்னிஷ் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

வாழும் காலம்

வாழும் காலம்

ரூபாய் நோட்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் அதனுடைய லைப்டைம், அதாவது வாழும் காலம்.

இந்நிலையில் ரூபாய் நோட்டுகளின் வாழும் கால அல்லது பயன்பாட்டுக் காலம் அதிகரிக்க வார்னிஷ் கோட்டிங் செய்யப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளைச் சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

உலக நாடுகள்

உலக நாடுகள்

2017-18 வருடாந்திர அறிக்கையில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளின் லைப்டைம் அதிகரிக்க முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் உலக நாடுகள் மத்தியில் ஆய்வு செய்ததில் வார்னிஷ் கோட்டிங் கொண்ட ரூபாய் நோட்டுகளின் லைப்டைம் சிறப்பாக இருப்பதாகவும், பழைய ரூபாய் நோட்டுகளை விரைவான காலத்தில் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதைக் கண்டுப்பிடித்துள்ளது.

தற்போது இந்த முறையில் நடப்பு நிதியாண்டில் அமலாக்கம் செய்து சோதனை செய்ய உள்ளது.

 

100 ரூபாய் நோட்டு

100 ரூபாய் நோட்டு

முதற்கட்டமாக இந்தியச் சந்தையில் அதிகப் பணப்புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாயை ரிசர்வ் வங்கி தேர்வு செய்துள்ளது. மார்ச் 2019-இன் தகவல்கள் படி மொத்த பணப்புழக்க சந்தையில் 47.2 சதவீதம் வகிக்கும் 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளைத் தேர்வு செய்துள்ளது.

விரைவில் வார்னிஷ் பூசப்பட்ட 100 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டு வர உள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+