உலகின் ஆடம்பர கார் பிராண்டுகளின் ராஜாவாகக் கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிதாக உருவாக்கியுள்ள கலினன் காரை இந்தியாவில் சுமார் 6.95 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.
குலினன் கார் தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி கார் என்பதால் உலகம் முழுவதும் இக்கார்களின் ரசிகர்களின் மத்தியில் ஹாட் டாபிக் ஆக விளங்கி வருகிறது.
முதல் ரோஸ் ராய்ஸ்
இப்படி உலகம் முழுவதும் வியந்து பார்க்கும் கலினன் கார் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில் முதலில் இந்தக் காரை யார் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்ட இருந்த நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் மிகப்பெரிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி
பல அதிநவீன சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த அற்புத எஸ்யூவி காரை இந்தியாவில் முதல் ஆளாக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் முறையாக வாங்கியுள்ளார்.
5 நொடியில் 100
டிவின் டர்போசார்ஜர்ஸ் கொண்ட 6.8 லிட்டர் வி12 இன்ஜின் கொண்டது இந்தக் கலினன் கார், 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் காராக இது விளங்குகிறது. அனைத்திற்கும் மேலாக இந்தக் கார் வெறும் 5 நொடியில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொடும்.
6.95 கோடி ரூபாய்
இன்று முன்னணி நிறுவன கார்களில் இருக்கும் அனைத்தும் சேவைகளும் மேம்படுத்தப்பட்ட வகையில் இந்தக் கலினன் காரில் உள்ளது. இந்தக் காரின் துவக்க மாடலின் விலையே 6.95 கோடி ரூபாய் அளவில் உள்ளது.
இந்தக் காரின் கலினன் பெயர் 3100 கேரட் வைரத்தின் வாயிலாகப் பெற்றுள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.
நவீன வசதிகள்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக முகேஷ் அம்பானி வாங்கிய கார் கண்டிப்பாக அடிப்படை மாடலாக இருக்காது. முகேஷ் அம்பானியின் பாதுக்காப்பு கருதி புல்லட் ப்ரூப், சில முக்கிய மாற்றங்கள், அதிவேக இண்டர்நெட், தொலைத்தொடர்பு கருவிகள் ஆகியவை அதில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முகேஷ் அம்பானி வாங்கிய கார் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாயில் இருந்து 15 கோடி ரூபாய் வரையில் இருக்குமென் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications