மும்பை : ரயிலில் கடைசி நேரத்தில் பயணிப்பவர்களுக்கு கடைசி நேரத்தில் கை கொடுப்பது தட்கல் டிக்கெட் தான்.
அந்த வகையில் ரயிலில் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வசதிக்காக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்போது குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த முறை, கடந்த 2004-ம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. ரயில்களில் 2-ம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவிகிதமும், மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 30 சதவிகித அடிப்படை கட்டணமும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு பிரீமியம் தட்கல் டிக்கெட் முன் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 50 சதவிகித தட்கல் ஒதுக்கீடு டிக்கெட்டுகள் டைனமிக் கட்டண முறையைப் பயன்படுத்தி விற்கப்படுகின்றன.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு அளித்த பதில் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரயில்வேக்கு 25,392 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது 2016 முதல் 2019 வரையிலான 4 ஆண்டுகளில் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து ரூ.21,530 கோடியும், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து கூடுதலாக ரூ.3,862 கோடி என மொத்தம் ரூ.25,392 கோடி கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தட்கல் கோட்டா மூலம் 21,530 கோடி ரூபாயும், இதுவே தட்கல் பிரிமியம் டிக்கெட் மூலம் 3,862 கோடி ரூபாயாகவும் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய வருவாயோடு ஒப்பிடும்போது 32 சதவிகிதம் அதிகமாகும்.
ரயில்வே புள்ளி விவர அறிக்கையின் படி, தட்கல் திட்டம் தற்போது 2677 ரயில்களில் செயல்பாட்டில் உள்ளது. இம்முறையில் 1.71 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தட்கலில் 11.57 லட்சம் சீட்கள் தட்கல் முறையில் பதிவு செய்துகொள்ளும் வசதியும் உண்டு.
இந்த நிலையில் இந்த தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்ததில், கடந்த 2016 - 2017ம் ஆண்டில் இந்த தட்கல் டிக்கெட்களின் மூலம் வருவாய் 6,672 கோடி ரூபாயாகவும், இதே 2017 - 2018. 6,952 கோடி ரூபாயாகவும் வருவாய் இருந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications