5 வருடத்தில் 1 கோடி.. வியப்பளிக்கும் இந்திய நிறுவனம்..!

இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பெரும்பாலானவர்கள் குறைந்த அளவிலான லாபத்தை மட்டுமே அடைகின்றனர். இதிலும் சிலர் அதிகளவிலான நஷ்டத்தையும் அடைந்து வருகின்றனர், குறிப்பாகக் கடந்த 5 வருட காலத்தில் முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான வர்த்தக மற்றும் லாப சரிவைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு இந்திய நிறுவனத்தின் பங்குகளில் 7.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் நீங்கள் ஒரு கோடி ரூபாய் பெற்று இருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அதுவும் 5 வருடத்தில்..?

5 வருடத்தில் 1 கோடி.. வியப்பளிக்கும் இந்திய நிறுவனம்..!

இந்திய பங்குச்சந்தை மோசமான நிலையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தச் செய்தி உங்களுக்கு மகழ்ச்சி அளிக்கும். எந்த நிறுவனம் எனத் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கும் என்பது தெரிகிறது.

அந்த நிறுவனத்தின் பெயர் மின்டா இண்டஸ்ட்ரீஸ்.

ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் துறையில் இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களில் ஒன்று மின்டா இண்டஸ்ட்ரீஸ். நான்கு சக்கர வாகன பிரிவில் எலக்ட்ரானிக் மற்றும் மெகானிக்கல் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ், இம்மொபிலைசர், டோர் ஹேண்டில்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பாலி கண்ட்ரோலர்ஸ், ஸ்டார்ட் சிஸ்டம்ஸ், பவர் க்ளோசர் சிஸ்டம்ஸ், எல்ஈடு சாப்ட் டச் மற்றும் கேமரா மாடியூல்ஸ், போன்ற பல பொருட்களைத் தயாரிக்கிறது.

இதேபோல் இருசக்கர வாகன பிரிவில் இங்னிஷன் ஸ்விட்ச் ம் ஸ்டியரீங் லாக், பியூயல் டே கேப், லாட்ச் அண்ட் கேபிள், டூல் பாக்ஸ், லாக்ஸ், இம்மொபிலைசர் மற்றும் மேக்னெடிக் மாடியூல் போன்ற பொருட்களைத் தயாரிக்கிறது.

இப்படிப் பல தரப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் 5 வருடத்திற்குப் பின் வெறும் 25 ரூபாயாக இருந்த மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 1244 சதவீதம் வரையில் உயர்ந்து 336 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறையில் தற்போது மோசமான நிலையில் இருப்பதால் கடந்த ஒரு வருடத்தில் 27 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இல்லையெனில் 1700 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும்.

கடந்த 5 வருடத்தில் மின்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விற்பனை அளவு 3.7 சதவீதம் வரையில் உயர்ந்து 5,908 கோடி ரூபாய் அளவையும், லாபம் 5.3 கோடியில் இருந்து 320 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இப்படியிருக்கும் நிலையில் 2014ஆம் நிதியாண்டில் நீங்கள் இந்நிறுவனத்தில் 7.5 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 1 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்திருக்க முடியும்.

ஒவ்வொரு துறையிலும் வேகமாக வளரும் நிறுவனங்களைக் கண்டுப்பிடித்துவிட்டாலே போதும். பண மழை தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+