டெல்லி : தொலைதொடர்பு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்பு ஆட்டம் காணத் தொடங்கியது உண்மைதான். அதிலும் பல நிறுவனங்கள் காணமல் போயின.
அதில் தப்பித் தவறி சந்தையில் நின்ற நிறுவனங்களில் பார்தி ஏர்டெல்லும், வோடபோன் ஐடியாவும் ஒன்று. இவ்விரு நிறுவனங்கள் நஷ்டத்தையே கண்டாலும் ஜியோவுக்கு எதிராக சந்தையில் பற்பல ஆஃபர்களை வழங்கி, சந்தையில், ஓரளவு நின்று வருவதை காணமுடிகிறது.
இந்த நிலையில் ஜியோ வருகைக்கு பின்னர் நஷ்டத்தை மட்டுமே கண்டு வந்த வோடபோன், மிகுந்த தொடர் நஷ்டத்தை கொடுக்கும் சில பகுதிகளில் இருந்து வோடபோன் ஐடியா வெளியேறப் போவதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளது வோடபோன்.
தவறான யூகம்
தற்போது தவறாக பரவி வரும் இந்த யூகத்தின் அடிப்படையிலான கருத்துகள், தவறானவை என வோடபோன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் அறிக்கையில் வோடபோன் ஐடியா குறிப்பிட்ட ஆறு பகுதிகளில் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வருவதாகவும், இதனால் ஹிமாச்சல பிரதேசம், பீகார், ஓடிசா, ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் அசாம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வெளியேறப் போவதாகவும் தவறான யூகங்கள் வெளியாகி வருகின்றன. இதை நாங்கள் திட்டவட்டமாகக் மறுக்கிறோம் என்றும் வோடபோன் கூறியுள்ளது.
பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்
நாங்கள் வெளியேறுவதாக கூறிய பகுதிகளில் இருந்து, எங்களுக்கு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு நாங்கள் இந்த பகுதிகளில் இருந்து வெளியேறக்கூடும் என்ற தவறான தகவல்களை மறுக்கிறோம். மேலும் இந்தப் பகுதியில் எங்களது சேவைகளை தொடர்ந்து செய்ய உறுதியுடன் இருந்து வருகிறோம். அதோடு இனியும் தொடர்ந்து இந்த சேவையை வோடபோன் ஐடியா செய்யும் என்றும் கூறியுள்ளது.
சில பகுதிகள் வருவாய் இழப்பு
வோடபோன் ஒரு புறம் இவ்வாறு அறிக்கையை கொடுத்தாலும், மறுபுறம், இந்த இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்த பெரும்பாலான பகுதிகளில், தொடர்ந்து நஷ்டத்தையே கண்டு வருகின்றன. இதனால் டெல்கோ தனது வருவாய் பங்கினை பெரிதும் இழந்துள்ளது என்றும் ஜே.எம் பைனான்ஷியல் தெரிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா உறுதி
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஆக்ஸ்ட்31, 2018ம் தேதியிலிருந்து வெற்றிகரமாக இணைக்கப்பட்டன. அந்த இணைப்பிற்கு பிறகு பல முறை இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக வழி நடத்துதில், பல முறைகள் நம்பிக்கையை இந்த நிறுவனங்கள் வெளிபடுத்தியுள்ளன. இந்த நிலையில் நடப்பு ஆண்டில், கடந்த காலாண்டில் ஹிமாச்சலப் பிரதேசம் தவிர அனைத்து பகுதிகளிலும் பலத்த நஷ்டத்தையே கண்டுள்ளது இந்த நிறுவனம்.
எங்கு அதிக நஷ்டம்
குறிப்பாக மெட்ரோ மற்றும் ஏ பகுதிகளில் தொடர்ந்து நஷ்டத்தினை கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, மஹாராஷ்டிரா, மும்பை, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நஷ்டத்தினையே கண்டு வருகிறது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications