8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என எல்லோருக்கும் தெரியும், ஆனா அது இந்த அளவிற்கு மோசமான நிலையில் இருப்பது இப்போது தான் தெரிந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது முக்கியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் உற்பத்திக்கும் தொழிற்துறைக்கும் அடிப்படையாக விளங்கும் 8 முக்கியத் துறைகள் அதாவது நாட்டின் Core sectors என அழைக்கப்படும் துறையின் வளர்ச்சி எப்போதும் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

2018 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்த 8 துறைகளின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதத்தில் வெறும் 2.1 சதவீதம் என்கிற மோசமான நிலையை அடைந்துள்ளது.

அதிலும் முக்கியமான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்கள் துறையின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது நாட்டு மக்களுக்கும், தொழிற்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.

 

8 முக்கியத் துறை

8 முக்கியத் துறை

விவசாய உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட் துறை தான் நாட்டின் 8 முக்கியத் தொழிற்துறையாக விளங்கி வருகிறது. இத்துறைகளின் சராசரி வளர்ச்சி கடந்த வருடம் ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தற்போது 2.1 சதவீதம் என்கிற மோசமான நிலையை அடைந்துள்ளது.

 

காலாண்டு வளர்ச்சி

காலாண்டு வளர்ச்சி

இதேபோல் ஏப்ரல் ஜூலை காலாண்டில் இந்த 8 துறைகளின் சராசரி வளர்ச்சி 5.9 சதவீதமாக இருந்த நிலையில் நடப்புக் காலாண்டில் இதன் அளவீடு 3 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 8 துறைகள் தான் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீட்டின் 40.27 சதவீத அளவை

 

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஜூன் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 காலாண்டுகளில் மோசமான நிலை என்கிற அளவிற்கு 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதன் அதிர்வுகளை இன்னும் சரிவர அடங்காத நிலையில் தற்போது வெளியாகியுள்ள 8 துறைகளின் வளர்ச்சி அளவீடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலிகள் செவ்வாய்க்கிழமை பங்குவர்த்தகத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Growth of 8 core sectors at 2.1% in July, down from 7.3% last year

Growth of eight core sectors slowed down to 2.1% in July as against 7.3% in the same month last year, according to government data released on Monday. This, along with weak manufacturing and consumption numbers, dragged India's GDP growth to a six-year low of 5% in the first quarter of April-June. The GDP growth has slowed for the fifth-straight quarter.
Story first published: Tuesday, September 3, 2019, 7:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X