டாக்ஸி வர்த்தகத்திற்குள் நுழைந்த மஹிந்திரா.. அதிரடி முடிவு எடுத்த ஆனந்த் மஹிந்திரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்ஸி சேவை அளிக்கும் மீரு நிறுவனத்தில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

 

இதன் மூலம் ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்திற்குள் பிற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல ஆனந்த் மஹிந்திரா தலைமை வகிக்கும் மஹிந்திரா நிறுவனமும் நுழைந்து இத்துறையில் தனது பயணத்தைத் துவங்கியுள்ளது.

மஹிந்திரா

மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாக ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பல முன்னணி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யத் துவங்கியது. இதன் பின்பு மஹிந்திராவும் இத்துறையில் இறங்க முதலீடு செய்துள்ளது.

தற்போது மீரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

 

55 சதவீத பங்குகள்

55 சதவீத பங்குகள்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மீரு டிராவல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளைச் சுமார் 201.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக மஹிந்திரா பங்குச்சந்தையில் சமர்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

 

ஒப்பந்தம்
 

ஒப்பந்தம்

இது மட்டும் அல்லாமல் இந்த முதலீட்டுக்குப் பின் மீரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க இரு நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

 

 

இணை நிறுவனம்

இணை நிறுவனம்

மஹிந்திரா, மீரு நிறுவனத்தில் 55 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் ஆதிக்கம் நிறைந்த நிர்வாக உரிமையைப் பெற உள்ளது. இதன் மூலம் மீரு டிராவல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனங்களான மீரு மொபிலிட்டி டெக் பிரைவேட் லிமிடெட், வி லிங்க் ஆட்டோமோடிவ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் வி லிங்க் பிலீட் சொல்யூன்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் இனி மஹிந்திராவின் இணை நிறுவனங்களாக இயங்கப்போகிறது.

 

 

 மீரு நிறுவனம்

மீரு நிறுவனம்

2006இல் துவங்கப்பட்ட மீரு நிறுவனம் 2018-19ஆம் நிதியாண்டில் 156.6 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இதே நிறுவனம் 2016-17இல் 277.2 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்ற நிலையில், தொடர் வர்த்தக வளர்ச்சி மற்றும் வர்த்க போட்டியின் காரணமாக வருவாய் குறைந்துள்ளது.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

இந்த வருடத்தின் துவக்கத்தில் தென்கொரிய நிறுவனங்களான ஹூன்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் சுமார் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது.

தற்போது மஹிந்திரா டாக்ஸி வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mahindra
English summary

Mahindra to acquire 55% stake in Meru for ₹201.5 crore

Mahindra & Mahindra, homegrown utility vehicles major, is acquiring 55% stake in ride hailing and radio taxi operator Meru Travel Solutions for a cash consideration of up to ₹201.5 crore, according to a regulatory filing by the company.
Story first published: Tuesday, September 3, 2019, 7:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X