35 சதவீத சரிவு.. கண்ணீரில் தத்தளிக்கும் மாருதி சுசூகி..!

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி தனது விற்பனையில் சுமார் 35.9 சதவீத சரிவை சந்தித்துச் சக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளது.

ஏற்கனவே ஆட்டோமொபைல் துறை மோசமான நிலையில் இருக்கும்போது, மாருதி சுசூகி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம்..

ஆகஸ்ட் மாதம்..

நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கார்களின் விற்பனை சுமார் 35.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசூகி வெறும் 94,728 கார்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

வர்த்தக வாகன சந்கை

வர்த்தக வாகன சந்கை

இந்த மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆட்டோமொபைல் துறையில் பயணிகள் கார் விற்பனை குறைந்து வர்த்தக வாகனங்களின் விற்பனை 3.1 சதவீதம் வரையில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

முக்கியக் கார்கள்

முக்கியக் கார்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் பழைய வேகன்ஆர் கார்களின் விற்பனை 71.8 சதவீதம் வரையில் சரிந்து 10,123 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதே கார்கள் கடந்த வருடம் சுமார் 35,895 கார்கள் விற்பனை செய்துள்ளது.

 

 

பிற கார்கள்

பிற கார்கள்

இதேபோல் மாருதியின் பாலெனோ, செலாரியோ, டிசையர், இக்னிஸ், நியூ வேகன்ஆர் கார்களின் விற்பனை 23.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதோடு சியாஸ் கார் 77.2 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 1,596 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

எஸ்யூவி கார்களான ஏர்டிகா, விடாரா ப்ரீசா, எஸ்கிராஸ் ஆகிய கார்களின் விற்பனை 3.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

 

வர்த்தக வாகனம்

வர்த்தக வாகனம்

மாருதி சுசூகி நிறுவனத்தின் வர்த்தக வாகனமான சூப்பர் கேரி 13.9 சதவீதம் விற்பனையில் சரிந்து வெறும் 1,555 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

மேலும் மாருதியின் ஏற்றுமதி எண்ணிகையும் 10.8 சதவீதம் சரிந்து 9,352 ஆகக் குறைந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+