இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் 'புதிய நம்பிக்கை'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான வர்த்தக நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில், இரு நிறுவனங்கள் மட்டும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்துச் சிறப்பான வர்த்தகத்தை அடைந்து வருகிறது.

சொல்லப்போனால் அடுத்த 5 மாதத்திற்கும் இவர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை. அந்த அளவிற்கு வர்த்தகம் இருக்கிறது..

யார் இவர்கள்..? ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த அதிகளவிலான வர்த்தகம் வருகிறது..?

8 துறைகளின் வளர்ச்சி வெறும் 2%.. என்ன செய்யப்போறீங்க மோடி..?

யார் இவர்கள்..?
 

யார் இவர்கள்..?

இந்திய ஆட்டோமொபைல் துறையில் புதிதாகக் களமிறங்கியுள்ள கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டாஸ் நிறுவனம் தான். இவ்விரு நிறுவனங்களும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு முதல் முறையாக இறங்கி மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

தரம் மட்டும் போதும்

தரம் மட்டும் போதும்

ஆட்டோமொபைல் சந்தை மோசமாக இருப்பதால் இவர்களின் வார்த்தகம் பாதிக்கும் எனப் பலரும் நினைத்தபோது, தரம் ஒன்று இருந்தால் போதும் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி அடையலாம் என்பதை இந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள் நிரூபணம் செய்துள்ளது.

 எம்ஜி மோட்டார்ஸ்

எம்ஜி மோட்டார்ஸ்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான எம்ஜி மோட்டார்ஸ் தற்போது SAIC மோட்டார் என்கிற சீன நிறுவனத்தின் முதலீடு மற்றும் கைப்பற்றதாலும் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி மோட்டார்ஸ் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 2,018 கார்களை விற்பனை செய்துள்ளது.

மாபெரும் வெற்றி
 

மாபெரும் வெற்றி

அறிமுகம் சேவையாக இந்திய மக்கள் மத்தியில் இடம்பெற வேண்டும் என்று எம்ஜி மோட்டார்ஸ் சுமார் 5 வருடத்திற்கு இலவச சர்வீஸ் சேவையை அறிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் சுமார் 15,000 கார்களுக்கான ஆர்டரையும், கிட்டதட்ட 28,000 கார்களுக்கான புக்கிங்-ம் எம்ஜி மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவில் 2வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் கியா மோட்டார்ஸ் இந்தியாவிற்கு முதல் முறையாக வந்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் ஹூண்டாய் நிறுவனம் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 33.88 சதவீத பங்களில் முதலீடு செய்து இணை நிறுவனமாக இயங்குகிறது. இதனால் மக்கள் மத்தியில் கியா மோட்டார்ஸ் இந்தியா வருகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனேயே இந்திய மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.

நம்பிக்கை

நம்பிக்கை

ஹூண்டாய் மீது மக்கள் ஏற்கனவே அதிகளவிலான நம்பிக்கை வைத்துள்ள காரணத்தால் கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

இதற்கு ஏற்றார் போல் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் காரும் தரத்திலும், வடிவத்திலும் சிறந்து விளங்குகிறது. இதனால் அறிமுகம் செய்யப்பட்ட 6 வாரத்திலேயே கியா நிறுவனம் சுமார் 30000 கார்களுக்கான புக்கிங் பெற்றுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

கடந்த 1.5 வருடத்தில் மட்டும் கியா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது அறிமுகம் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்று டிவி, டிஜிட்டல், பிரின்ட் மற்றும் ஆன்கிரவுன்ட் விளம்பர தளத்தில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்யதது.

வாடிக்கையாளர்கள்.

வாடிக்கையாளர்கள்.

இரு நிறுவனங்களின் கார் தரமும், வடிவமும் இதுவரையில் இந்தியாவில் யாரும் கொடுக்காத வண்ணம் இருக்கிறது. அதன் விலையும் சற்று குறைவாகவே இருப்பதாகக் கார் விரும்பிகள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் 100 கோடி ரூபாய் செலவு செய்து விளம்பரம் செய்தது இரு நிறுவனங்களுக்கும் பலன் கொடுத்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தக் கார் வாங்கும் அனைவரும் 35 வயதிற்குள் இருப்பவர்கள் என்பது தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: automobile
English summary

New auto entrants Kia and MG motors are cruising in Indian Auto Industry

Two new entrants into India’s automobile market, Kia Motors India and MG Motor India Pvt. Ltd, have attracted strong buyer interest with their maiden offerings—Seltos and Hector—amid plummeting demand for cars.
Story first published: Tuesday, September 3, 2019, 9:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X