மும்பை : ஒட்டுமொத்த வாகன துறையும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், கனரக மற்றும் டிரக்குகள் விற்பனை படு பாதளாத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அசோக் லைலேண்ட் நிறுவனம் 70 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த, அதிலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்தது. இந்தியாவிலேயே வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான, அசோக் லைலேண்ட், சர்வதேச அளவில் பேருந்துகள் உற்பத்தியில் நான்காவது இடத்திலும், இதே டிரக்குகள் உற்பத்தியில் 10 இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலை உள்ளது எனில், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என்பதை கணிக்க கூட முடியவில்லை.
வீழ்ச்சி கண்டுள்ள உற்பத்தி துறை
வர்த்தக வாகனங்களில் முன்னணி நிறுவனமான அசோக் லைலேண்ட், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் படு வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், வர்த்தக வாகன பிரிவும் மிக நலிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தி துறையின் வளர்ச்சி 5 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக உற்பத்தி துறை 0.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.9 லட்சம் வரை தள்ளுபடி
ஒட்டுமொத்த வணிக வாகனங்கள் துறையும் சரிந்துள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த முதல் நான்கு நிறுவனங்களான, டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட், வால்வோ ஈச்சர், மகேந்திரா அன்ட் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் 59.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 31,067 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் 49 டன்னுக்கும் மேலான எடை கொள்ளளவு கொண்ட டிரக்குகளுக்கு 9 லட்சம் ரூபாய் வரை கூட தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றன.
விற்பனை அதிகரிக்கலாம்
அதிலும் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பிஎஸ் 6 விதிமுறைகள், மற்றும் வரவிருக்கும் திருவிழா கால சீசன் தொடங்க இருக்கும் நிலையில், விற்பனையில் மாற்றம் இருக்கலாம் என்றும், ஏனெனில் அந்த விதிமுறைக்களுக்கு முன்னதாக சற்று விற்பனை அதிகரிக்கலாம் என்றும், வரும் பண்டிகை காலங்களிலும் விற்பனை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் 58% வீழ்ச்சி
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முன்னணி உற்பத்தியாரான, 10ல் 7 வாகனங்களை விற்பனை செய்யும் டாடா மோட்டார்ஸின் நிறுவனம், 58 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 5,340 வாகனங்கள் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல அதிக எடை கொண்ட டிரக்குகள் விற்பனையில் 70 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 3,336 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில்லறை விற்பனையை அதிகரிக்க திட்டம்
வர்த்தக வாகனங்கள் விற்பனை குறைந்துள்ள நிலையில், நலிவடைந்து காணப்படும் பொருளாதார வளர்ச்சியினால், வர்த்தக வாகனங்களின் தேவையும் குறைந்தே காணப்படுகிறது என்றும் டாடா மோட்டார்சின் தலைவர் (வணிக வாகனங்கள்) கிரிஷ் வாக் கூறியுள்ளார். மேலும் டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனையை விட, சில்லறை விற்பனை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர மத்திய அரசின் சமீபத்திய அறிக்கைகள் விற்பனைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி
இதுவே வால்வோ ஈச்சர் மற்றும் மகேந்திரா அன்ட் மகேந்திரா விற்பனை முறையே 41.7 சதவிகிதம் மற்றும் 69 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிக மோசமான நிலையில் உள்ள இந்த விற்பனையை அதிகரிக்க இந்த நிறுவனங்கள் டிரக்குகளுக்கு 8 - 9 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளித்து வருகின்றன.
உற்பத்தி அதிகரித்தால் தேவை அதிகரிக்கும்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சியாமின் தலைவர், வரும் மாதங்களில் தேவை அதிகரித்து, பொருளாதார வளார்ச்சியும் ஏற்படாவிட்டால், விற்பனை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் எச்சரித்துள்ளார். இதே ஐ.சி.ஆர்.ஏவின் தலைவரான ஷம்ஷர் திவான், புதிய வர்த்தக வாகனங்களுக்கான தள்ளுபடிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. அதிலும் முன்னாள் ஷோரூம் விலையில் 10 - 15 சதவிகிதம் வரை தள்ளுபடிகள் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் உற்பத்தி துறை, விவசாய உற்பத்திகள் வளர்ச்சி காணும் நிலையில் வர்த்தக வாகனங்கள் வளர்ச்சி காணும். இல்லையெனில் அதன் வளார்ச்சி இப்படிதான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications