மீண்டும் இலவசம்.. ஜியோவின் அடுத்தத் திட்டமும் தூள் பறக்கப்போகிறது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. துவக்கத் திட்டமாக இச்சேவையைச் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக அறிமுகம் செய்ய உள்ளது.

இலவசம்
 

இலவசம்

இச்சேவையைப் பெறக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் பல இலவசங்களை ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் சேவையை அறிமுகம் செய்யும் போது எப்படி இலவசங்களை அள்ளி வீசியதோ அதேபோல் பிராண்ட்பேன்ட் சேவைக்கும் சேவையை அள்ளி வீச உள்ளது.

5 லட்ச வாடிக்கையாளர்கள்

5 லட்ச வாடிக்கையாளர்கள்

ஜியோ பிராட்பேண்ட் சேவை வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள முதல் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாகச் சேவை வழங்க உள்ளதாக ஜியோ அறிவித்துள்ள நிலையில், இது முதல் முறையாகப் பெரிய அளவில் சோதனை செய்வதால் முதல் மாதத்திற்கு முற்றிலும் இலவசமாகச் சேவை அளிக்க உள்ளது ஜியோ.

ஜியோ அளிக்கும் இந்த இலவச சேவை திட்டத்தில் யார் எந்தத் திட்டத்தை வேண்டும் என்றாலும் அதைப் பெற்றுக்கொள்ளலாம் என ஜியோ அறிவித்துள்ளது.

சேவை விபரம்

சேவை விபரம்

ஜியோ தனது பிராட்பேண்ட் சேவையை 700 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரையில் அளிக்க உள்ள நிலையில், அடிப்படை வேகமாக 100Mbps வேகத்தை அதிகப்படியாக 1Gbps டேட்டாவை வழங்குகிறது. இதன் மூலம் நாட்டின் அதிவேக இண்டர்நெட் இணைப்பு சேவையை அளிக்கும் நிறுவனம் என்ற முக்கியமான பெயரை ஜியோ பெற உள்ளது.

1000 ஜிபி டேட்டா இலவசம்
 

1000 ஜிபி டேட்டா இலவசம்

ஜியோ பிராட்பேண்ட் சேவைக்காக விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பச் சேவையாக 100ஜிபி டேட்டாவும் இலவசமாக லேன்டுலைன் சேவையும் வழங்க உள்ளது. 100 ஜிபி முடிந்த உடன் 24 முறை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொரு முறையும் 40 ஜிபி அடிப்படையில் கூடுதலாக 1000 ஜிபி டேட்டாவை ஜியோ வழங்க உள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இன்ஸ்டாலேஷன் செய்து கொடுக்கிறது ஜியோ. இச்சேவையைப் பெற refundable security deposit செலுத்த வேண்டும்.

இலவசமாக ஸ்மார்ட் டிவி

இலவசமாக ஸ்மார்ட் டிவி

இந்நிலையில் வருடாந்திர சந்தா செலுத்துபவருக்கு ஜியோ இலவசமாக 4K LED Smart TV வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த இலவசங்கள் இத்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani may use the hit Jio formula for his next disruption

Mukesh Ambani may use the hit Jio formula for his next disruption
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?