எச்சரிக்கை மணி அடிக்கும் எஸ்பிஐ..! ஜாக்கிரதையாக இருங்கள் மக்களே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அடுத்த இரண்டு மாதங்கள், இந்திய பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமான மாதங்கள் என திடீர் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் எஸ்பிஐ தலைவர் ரஜ்னேஷ் குமார்.

இந்தியாவின் மிகப் பெரிய அரசுப் பொதுத் துறை வங்கிகளில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ரஜ்னேஷ் குமாரே இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிக் கவலைப் படுவதைப் பார்த்து பொது மக்களும் கொஞ்சம் பதட்டம் அடைந்து இருக்கிறார்கள்.

சரி என்ன சொல்லி இருக்கிறார். அப்படி என்ன பிரச்னை வரப் போகிறது..? ஏன் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் முக்கியம்..? வாருங்கள் பார்ப்போம்.

எச்சரிக்கை
 

எச்சரிக்கை

சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி தொடங்கி இனி வரிசையாக மொஹரம், ஓனம், நவராத்திரி, தசரா, கர்வா சவுத், தீபாவளி என பல முக்கிய பண்டிகைகள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் பல தரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட இருக்கின்றன. தற்போது இந்தியாவில் பிரச்னையே நுகர்வு இல்லாதது தான். ஆனால் இந்த பண்டிகை காலங்களில், வழக்கமான நாட்களை விட நுகர்வு, பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் மக்கள் செலவு செய்ய இருக்கிறார்களா இல்லையா என்பதும் இந்த மாதங்களில் தெரிய வந்து விடும் எனச் சொல்லி இருக்கிறார் ரஜ்னேஷ் குமார்.

வரலாறு காணாத வீழ்ச்சி

வரலாறு காணாத வீழ்ச்சி

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது நம் இந்தியப் பொருளாதாரத்தின் 2019 - 20 நிதி ஆண்டில் எப்ரல் - ஜூன் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 5% ஆக சரிந்து இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையை எடுத்துக் கொண்டால் கியா மோட்டார்ஸ் நல்ல எண்ணிக்கையில் வாகனங்களை விற்று இருக்கிறார்கள். அதோடு ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையும் பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ரஜ்னேஷ் குமார்

சூழல்

சூழல்

இப்போது உலக பொருளாதார சூழல் ஆகட்டும், இந்தியப் பொருளாதார சூழல் ஆகட்டும் இரண்டிலுமே பிரச்னைகள் இருக்கின்றன. அதோடு பொது மக்கள் மன நிலையிலும் மாற்றங்கள் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த மந்த நில்லையில், எவ்வளவு சதவிகிதம் வழக்கம் போல சுழற்சி முறையில் வரும் இறக்கம் (Cyclical), எவ்வளவு சதவிகிதம் அரசின் தவறான கொள்கை முடிவுகளால் (Structural) வந்தவை எனத் தெரியவில்லை எனவும் சொல்லி கொஞ்சம் பயமுறுத்தியும் இருக்கிறார் ரஜ்னேஷ் குமார்.

சிறப்பாக செயல்பட வேண்டும்
 

சிறப்பாக செயல்பட வேண்டும்

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சிலவற்றின் விற்பனை கடந்த மாதங்களில் சுமார் 50 சதவிகிதம் வரை கூட சரிந்து இருக்கிறது. ஆட்டோமொபைல் டீலர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் வேலை இழப்பும் பயங்கரமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் சரி செய்ய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு வங்கிகளை இணைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து கடன் வளர்ச்சியை பெருக்க நினைக்கிறது.

வரவேற்கிறோம்

வரவேற்கிறோம்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே வங்கி இணைப்புத் திட்டம் அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்கள். இதை செய்தே ஆக வேண்டும். ஒரு நல்ல செயல்பாட்டு அணி இருந்தால், எப்படிப்பட்ட கடன் மந்த நிலையையும் சிறப்பாக கையாண்டு மீட்டு விடலாம். தற்போது நம் முன் இருக்கும் பிரச்னையே தகவல் தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு போன்றவைகள் தான் எனவும் சொல்லி இருக்கிறார் ரஜ்னேஷ் குமார். சமீபத்தில் தான் 10 அரசு வங்கிகளை நான்காக இணைக்கப் போவதாக நிதி அமைச்சர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

சுழற்சி

சுழற்சி

ஆக மொத்தத்தில் இந்த செப்டம்பர், அக்டோபர் மதங்களில் தான் ஒட்டு மொத்த இந்தியாவின் வியாபாரமும் தலை எடுத்து மேலே வரப் போகிறதா அல்லது மீண்டும் மந்த நிலையிலேயே சிக்கிக் கொள்ளப் போகிறதா என்பது தெரிய வரப் போகிறது. இந்த காலங்களில் மக்கள் கொஞ்சம் பண்டிகையைக் கொண்டாட செலவு செய்யத் தொடக்கினால் தான் நுகர்வு மேம்படும், மேம்பட வேண்டும்.

அடுத்தடுத்த சுழற்சி

அடுத்தடுத்த சுழற்சி

அதிக நுகர்வினால் பொருட்களுக்கான் தேவை அதிகரிக்கும், புதிதாக வரும் தேவையை நிரப்ப உற்பத்தி அதிகரிக்கும், உற்பத்தி செய்ய மீண்டும் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவார்கள், ஊழியர்களின் வேலை பாதுகாக்கப்படும், ஊழியர்கள் கைக்கு சம்பளம் போகும், சம்பளப் பணம் மீண்டும் முறையாக குடும்பத்துக்கு செலவு செய்யப்படும்... இப்படியாக சுழற்சி தொடரும். இப்படியாக பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வரும். அதுவரை இருக்கும் வேலையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் வேலை காலி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Alarming: next few months are too important to Indian economy festival may revive the consumption

SBI Alarming: next few months are too important to Indian economy festival may revive the consumption
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?