பணமில்லாமல் தவிக்கும் ரிலையன்ஸ் நேவெல்.. பாவம் அனில் அம்பானி..!

அனில் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம் சுமார் 9000 கோடி ரூபாய் கடனில் மிதக்கிறது. இக்கடனுக்கான வட்டியும், அசலும் பல மாதங்களாகச் செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா கடன் பிரச்சனையில் எடுக்கப்பட்ட அதே நடவடிக்கையை இந்த நிறுவனத்திற்கும் எடுக்கப்பட்டுள்ளது.

பணத் தட்டுப்பாடு

பணத் தட்டுப்பாடு

இந்நிறுவனத்திற்குப் புதிய ஆர்டர்கள் எதுவும் வராத நிலையில் ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணப் பழக்கம் முழுமையாகக் குறைந்துள்ளது.

இந்த நிலை குறித்து நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் மீது திவால் நடவடிக்கை எடுக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதாகத் தெரிகிறது.

 

காலத் தாமதம்

காலத் தாமதம்

கடனுக்கான தீர்வை அடையும் முயற்சியில் நிறுவனத்தில் பணப் புழக்கம் அதிகளவில் குறைந்துள்ளது. இதேபோல் பணத் தட்டுப்பாட்டுக் காரணமாகத் தற்போது நிறுவனத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் திட்டங்களும் முடியக் காலத் தாமதம் ஆகும் நிலை உருவாகியுள்ளது என ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Debashis Bir தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

அனில் அம்பானிக்கு ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் திவால் ஆக உள்ளது. இந்திய ராணுவ தடவாளங்களை மேம்படுத்தும் 250 பில்லியன் டாலர் அளவிலான திட்டத்தை மோடி அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகப் போர் கப்பல் மற்றும் ரோந்து கப்பல்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் 2.2 பில்லியன் டாலர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பயன் இல்லை

பயன் இல்லை

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த கொள்கை மாற்றங்கள் இத்துறை சார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க தவறியதன் விளையாக ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் பெரிய ஆர்டர்கள் எதுவும் பெறவில்லை. ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களையும் இணைந்து ஒரு குழு அமைத்து IDBI வங்கி தலைமையில் இயங்கி வருகிறது.

திவால்

திவால்

கடனுக்கான வட்டியும், அசலும் செலுத்தப்படாத நிலையில் இந்நிறுவனத்தின் கடனை தீர்க்கும் பொருட்டு IDBI வங்கி தலைமையிலான குழு இந்நிறுவனத்தின் மீது திவாலாக அறிவிக்கும் வேலைகளைத் துவங்கியுள்ளது.

கடனை தீர்க்க முறையான திட்ட வடிவம் எதுவும் கொடுக்க முடியாத நிலையில் அனில் அம்பானியும், ரிலையன்ஸ் நேவெல் மற்றும் இன்ஜினியரிங் நிர்வாகமும் இருக்கும் காரணத்தால் IDBI வங்கி குழு இந்த முடிவிற்கு வந்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+