டெல்லி : முன்னதாக அரசின் கூடுதல் கட்டணத்தால் தான், அதிகளவிலான வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு கடந்த வாரம் அந்த கூடுதல் கட்டணங்களை விலக்கியது.
எனினும் இந்த அதிகப்படியான கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையிலும், நாளுக்கு நாள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.

இது தற்போது அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது என்றே கூறலாம். உலகளாவிய நாணய நிலைப்பாடு, பொருளாதார நிலை இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இது அடுத்து வரும் சில மாதங்களுக்கும், அரசுக்கு பெரும் தலைவலியாகவே இருக்கும் என்றும், இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது. மேலும் இது அரசு எதிர்பார்த்தற்கு தலைகீழாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
முக்கிய பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இன்மை, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றங்கள், வர்த்தக போர் பற்றிய பதற்றங்கள், இதனால் மெதுவாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி, இது போன்ற பல காரணிகள் இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் படிப்படியாக குறைய, காரணிகளாக அமைந்தன. இது வளர்ந்து வரும் கடன் சந்தைக்கு எதிர்மாறாக உள்ளது என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.
மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான வரி, உலகளாவிய அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தத்தின் மத்தியிலேயே முதலீடுகளை வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர்.
அதிலும் மத்திய நிதிமையச்சர் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறுவதை தவிர்க்கும் பொருட்டு கூடுதல் கட்டணங்களை குறைத்தார். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 8,319 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவே கடந்த ஜூலை மாதத்தில் 2,985 கோடி ரூபாய் முதலீடுகள் ஈக்விட்டி மற்றும் கடன் சந்தையில் இருந்து வெளியேறியதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் இந்தியாவைப் போலவே சீனாவும், வளர்ந்து வரும் சந்தைகளுக்கு முதலீடுகளை இழுத்து செல்லும், இதனால் இந்தியாவில் முதலீடுகள் குறையலாம் என்றும் இந்தியா ரேட்டிங்ஸ் கூறியுள்ளது.
இதே நான்கு பெரிய மத்திய வங்கிகளின் ஒட்டுமொத்த பணபுழக்கம் உட்செலுத்துதல், சுமார் 186 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், இது முன்னதாக கடந்த 2018 மற்றும் 2017ல் 353 பில்லியன் டாலர் மற்றும் 1.45 டிரில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கையில் தொடர்ந்து மந்த நிலை காணப்படுவதால், செப்டம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரையில் மத்திய மாநில அரசுகள் மொத்தமாக 6.35 லட்சம் கோடி சந்தைக் கடன் வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications