ரெட் அலர்ட் கொடுக்கும் சி.எம்.ஐ.இ.. புதிய வேலைவாய்ப்புகள் இல்லை.. வேலையின்மையே அதிகரிக்கும்!

டெல்லி : இந்தியாவில் வேலையின்மை விகிதம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 36 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான சி.எம்.ஐ.இ அறிவித்துள்ளது.

நாட்டில் வாராந்திர வேலையின்மை விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 - 9 சதவிகிதம் வரையில் இருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தில் 7 - 8 சதவிகிதமாக இருந்தது கவனிக்கதக்கது.

இவ்வாறு வெளியிடப்பட்ட இந்த வேலையின்மை விகிதமானது, கடந்த செப்டம்பர் 2016 முதல் ஒப்பிடும்போது தற்போது தான் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.

நகர்புறங்களில் வேலையின்மை அதிகரிப்பு

நகர்புறங்களில் வேலையின்மை அதிகரிப்பு

அதிலும் நகர்புறங்களில் இந்த வேலையின்மை விகிதம் மிக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நகர்புறத்தில் 9.6 சதவிகிதமாகவும், இதுவே கிராமப்புறங்களில் 7.8 சதவிகிதமாகவும் இருந்துள்ளதாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆகஸ்ட் 2019ல் வேலைவாய்ப்புகள், கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது 2 சதவிகிதம் அதிகம் என்றும், இதே கிராமப்புறங்களில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் 2019ல் 2.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது நல்ல அறிகுறி

இது நல்ல அறிகுறி

வேலையின்மை விகிதத்தின் பின்னணியில் உள்ள காரணிகளில் ஒன்றான தொழிலாளர் பங்க்கேற்பு விகிதம், நடப்பு ஆண்டு ஆக்ஸ்டில் 43.35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக ஆகஸ்ட் 2018ல் 42.46 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த விகிதமானது மெதுவான மற்றும் சீரான வளர்ச்சியில் சற்று உயர்ந்து தற்போது காணப்படுகிறது. இந்த பங்கேற்பு விகிதமானது அதிகரித்துள்ளது, ஒரு புறம் நல்ல ஆரோக்கியமான அறிகுறியாகவே கருதப்படுகிறது. இது வேலை தேடும் தொழிலாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றும் சி.எம்.ஐ.இ கூறியுள்ளது.

வேலையின்மைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்

வேலையின்மைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்

இந்தியாவில் இந்த அளவுக்கு வேலையின்மை அதிகரிக்க டிமானிட்டைசேஷன் மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகமும் ஒரு காரணம் என்றும் சி.எம்.ஐ.இ கூறியுள்ளது. எப்படி எனினும் மேற்கூறப்பட்ட தொழிலாளர் பங்கேற்பு விகிதமானது, வேலையின்மை விகிதத்தோடு ஒப்பிடும்போது, இந்த இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நிறைய மக்கள் வேலைக்காக முயல்கிறார்கள் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய முதலீடுகள் அவசியம்

புதிய முதலீடுகள் அவசியம்

இந்த வேலைவாய்ப்பின்மையை அகற்ற முதலீடுகள் அதிகரிக்க வேண்டும், புதிய முதலீடுகள் என்பது தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. அதிலும் புதிய புதிய துறைகளில் முதலீடுகள் அதிகரித்தால் மட்டுமே, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், வருடாந்திர அறிக்கையில் நிறுவனங்கள் எந்த வித புதிய முதலீடுகளையும் பெற்றுள்ளதாகவும் தெரியவில்லை. மேலும் முதலீடுகள் அதிகரிப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. ஆக நல்ல தரமான வேலைவாய்ப்புகள் என்பது இங்கு மிக மிகக் குறைவே என்றும் கூறப்படுகிறது.

அரசுக்கு வேண்டுகோள்

அரசுக்கு வேண்டுகோள்

மேற்கூறிய இந்த மோசமான வாய்ப்புகளினால், வேலையின்மை இன்னும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் இது புதிய வேலையை சந்தையை மிக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்த, பல புதிய முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக தனியார் துறைகளிலும் முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் மிக சரிவில் உள்ள ஆட்டோமொபைல் துறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும்போது, லட்சக் கணக்கானோர் மீண்டும் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் நிபுனர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+