Jio GigaFiber வாங்கப் போகிறீர்களா..? அப்படி என்றால் இதெல்லாம் தெரிய வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோவை அறிமுகப்படுத்தி அனைத்து டெலிகாம் நிறுவனங்களையும் இன்று கதி கலங்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

அதே போல இன்று இந்த செப்டம்பர் 05, 2019-ல் ரிலையன்ஸ் நிறுவனம் தன் Jio GigaFiber திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இன்று முதல் டிடிஹெச், பிராட்பேண்ட் சேவை, டெலிகாம், தகவல் தொலைத் தொடர்பு போன்ற சேவைகளில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் பல நிறுவனங்களும் என்ன செய்து தங்கள் வியாபாரத்தை Jio GigaFiber திட்டத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

சரி Jio GigaFiber திட்டத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் என்ன எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..!பிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..!

1. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் எத்தனை வகையான இணைய சேவை திட்டங்கள் இருக்கின்றன

1. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் எத்தனை வகையான இணைய சேவை திட்டங்கள் இருக்கின்றன

ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தில் மொத்தமே இரண்டு வகையான திட்டங்கள் தான் இருக்கிறதாம். இருப்பதிலேயே விலை மலிவான ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்துக்கு மாதம் 700 ரூபாய் கட்டணம். இதன் மூலம் 100 எம் பி பி எஸ் வேகத்தில் இணைய சேவையைப் பெறலாம். இருப்பதிலேயே அதிகபட்ச விலை கொண்ட திட்டத்துக்கு மாதம் 10,000 ரூபாய் கட்டணம். இந்த திட்டம் மூலம் 1 ஜி பி பி எஸ் வேகத்தில் இணைய சேவையைப் பயன்படுத்தலாம்.

 

2. எங்கு எல்லாம் கிடைக்கும்

2. எங்கு எல்லாம் கிடைக்கும்

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் இந்தியா முழுக்க செயல்படுத்த இருக்கிறார்கள். ஆனால் முதல் கட்டமாக தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், ஹைதராபாத், சூரத், வதோதரா, நொய்டா, காசியாபாத், புவனேஸ்வர், வாரனாசி, அலஹாபாத், பெங்களூரு, ஆக்ரா, மீரட், விசாகப்பட்டினம், லக்னெள, ஜாம்செத்பூர், ஹரித்வார், கயா, பாட்னா, போர்ட் பிளேர், போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறதாம். படிப்படியாக இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சேவை வழங்கப்படுமாம்.

3. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

3. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

ஜியோ ஜிகா ஃபைபர் லிங்க் - https://gigafiber.jio.com/registration என்கிற வலைதளத்தில் முதலில் கூகுள் மேப்பில் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சரியாக உங்கள் விலாசத்தைக் கொடுங்கள். அதன் பின், வழக்கம் போல உங்கள் முழு பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகளைக் கொடுத்து ஓடிபியைப் பெறுங்கள். வரும் ஓடிபியை ஜியோ வலைதளத்தில் கொடுத்தால் போதும். மீண்டும் வீட்டு முகவரியை உறுதி செய்யச் சொல்கிறார்கள். இதை எல்லாம் செய்து முடித்தால், அவ்வளவு தான் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வந்த பின் நம்மை அழைத்து ஜியோ நிறுவனமே விவரங்களைச் சொல்வதாகச் சொல்கிறார்கள்.

4. ஜியோ ஜிகா ஃபைபர் சேவை எப்போது  கிடைக்கும்

4. ஜியோ ஜிகா ஃபைபர் சேவை எப்போது கிடைக்கும்

நாம் பதிவு செய்த பின், ஜியோ நிறுவன ஆட்களே நம்மை தொடர்பு கொண்டு மேற் கொண்டு விவரங்களைச் சொல்வார்களாம். அதன் பிறகு தான் நம் வீட்டில் ஜியோ ஜிகா ஃபைபர் ரவுட்டரை இன்ஸ்டால் செய்வார்களாம். ரவுட்டர் இன்ஸ்டால் செய்து ஒரு சில மணி நேரத்திலேயே (இரண்டு மணி நேரத்தில் என்கிறார்கள் ஜியோ தரப்பினர்) ஜியோ சேவையை ரசிக்கத் தொடங்கலாம்.

குறிப்பு: நம் வீட்டுக்கு அருகில் ஜியோ ஜிகா ஃபைபர் லைன் போக வேண்டும். அப்படிப் போனால் தான் நமக்கு இணைப்பே கிடைக்கும் இல்லை என்றால் கிடைக்கவே கிடைக்காது.
5. ஜியோ ஜிகா ஃபைபர் இன்ஸ்டாலேஷனுக்கு எவ்வளவு கட்டணம்

5. ஜியோ ஜிகா ஃபைபர் இன்ஸ்டாலேஷனுக்கு எவ்வளவு கட்டணம்

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இன்ஸ்டாலேஷன் கட்டணங்கள் எதுவும் கிடையாது. ஆனால் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை கொண்டாட நம் வீட்டில் வைக்கப்படும் ரவுட்டருக்கு 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த கட்டணத்தை நாம் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை முழுமையாக செயல்படத் தொடங்கிய பின் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். மேற்கொண்டு இன்ஸ்டாலேஷன் பணிக்கு வரும் ஜியோ ஊழியர்களிடம் விவரமாக கேட்டுக் கொள்ளுங்கள். கொடுத்த பணத்துக்கான ஆதாரத்தையும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

6. ஜியோ ஜிகா ஃபைபர் செட் டாப் பாக்ஸில் என்ன சிறப்பு

6. ஜியோ ஜிகா ஃபைபர் செட் டாப் பாக்ஸில் என்ன சிறப்பு

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்கும் செட் டாப் பாக்ஸ் வழியாக கேபில் ஆபரேட்டர்கள் கொடுக்கும் அனைத்து சேனல்களையும் கண்டு கழிக்கலாம். அதோடு ஹெச் டி தரத்தில் சிறப்பாக வீடியோ கேம் விளையாடலாம். வீடியோ கால் செய்யலாம். அவ்வளவு ஏன் Virtual Reality and Mixed Reality சேவைகள் கூட வரப் போகிறதாம். இத்தனை சேவைகளை ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் கொடுக்க இருக்கும் செட் டாப் பாக்ஸ் வழியாக பெறலாமாம்.

7. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் என்ன

7. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் என்ன

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வழியாக இணைய சேவையைப் பயன்படுத்தி ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ சாவன் போன்ற சேவைகளைப் பயன்படுத்தி படம் பாட்டு என கலக்கலாம். குறிப்பாக ஜியோ ஜிகா ஃபைபர் ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு முதல் நாள் முதல் ஷோ திரைப்படம் கூட பார்க்கலாம். இத்தனை சேவைகளைக் காண ஜியோ நிறுவனம் இலவசமாக கொடுக்கும் 4 கே எல் இ டி டிவி + 4 கே ஜியோ ஜிகா ஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொடுப்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

8. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இலவச சேவை எத்தனை நாட்கள் வரை பெறலாம்

8. ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இலவச சேவை எத்தனை நாட்கள் வரை பெறலாம்

ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் தொடங்கப்பட்டு, இந்த முதல் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக சேவைகளைப் பெறலாம் என்கிறார்கள். அதன் பிறகு தான் வணிக ரீதியாக எல்லா சேவைகளுக்கும் முறையாக திட்டப்படி கட்டணங்கள் வசூலிக்கப்படுமாம். கட்டணங்கள் வசூலிக்கத் தொடங்கப்படும் காலத்தில் தான் நாம் முன்பு செலுத்திய 2,500 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆக கூடிய விரைவில் ஜியோ ஜிகா ஃபைபர் கொண்டாட்டம் தொடங்கும், பல நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio GigaFiber: are you going to buy jio gigafiber then you have to know these things

Jio GigaFiber: are you going to buy jio gigafiber then you have to know these things
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X