ரஷ்யாவுக்கு 7,100 கோடி கடன்.. வாரி வழங்கும் இந்தியா.. பிரதமர் மோடி அதிரடி!

மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரம் ஏற்றம் காண பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் 5வது கிழக்கு பொருளாதார மன்ற அமர்வில் உரையாற்றியவர், ரஷ்யாவுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7,100 கோடி ரூபாய்) கடன் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக ரஷ்யாவுடன் 15 ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாக கூறியுள்ள நிலையில், தற்போது ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக இந்தியா, சுமார் 7,100 கோடி ரூபாயை கடன் கொடுக்க முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் இதில் முக்கியமான ஒப்பந்தமாக ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியில் இருந்து, சென்னைக்கு கடல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது என்றும், இதற்காக, இந்த திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக "Act Far East" என்ற கொள்கையும் வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு

இந்தியா ரஷ்யா நட்பானது வெறும் நட்பு மட்டும் அல்ல, இது இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வெறும் அரசியல் ரீதியான நட்பாக மட்டும் அல்லாமல், மக்களுக்கும், வர்த்தக உறவுகளுக்கும் இடையே உள்ள நட்பு என்றும் கூறியுள்ளார். இந்த முயற்சியால் இனி இந்த வர்த்தக பந்தம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

எதற்காக இந்தக் கடன்

எதற்காக இந்தக் கடன்

பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கும் கொடுக்க முன்வந்துள்ள இந்த கடன் தொகையானது, ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களின் வளர்ச்சிக்காக இந்தியா கொடுக்க உள்ளது என்றும், இது 1 பில்லியன் டாலர் என்றும், இந்திய மதிப்பில் சுமார் 7,100 கோடி என்றும் கருதப்படுகிறது. ஏற்கனவே பல வர்த்தக ஒப்பந்தங்களும், நட்பு ரீதியாக இந்த இரு நாடுகளும் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பானது இந்த இரு நாடுகளுக்கு இடையே மேலும் வலுவான உறவை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா முதலீடு

ஏற்கனவே இந்தியா முதலீடு

இந்தியா ஏற்கனவே எனர்ஜி செக்டார், வைரங்கள் உள்ளிட்ட இயற்கை துறைகளில், ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளது. அதிலும் இந்தியாவின் முதலீட்டிற்கு சிறந்த உதாரணம் சாகலின் எண்ணெய் வயல்கள் என்றும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் பங்குகளை வாங்க, இந்திய நிறுவனங்கள் முன்னதாக 7 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒ.என்.ஜி.சி முதலீடு

ஒ.என்.ஜி.சி முதலீடு

கடந்த 2001ம் ஆண்டில் அதன் முதன்மை வெளிநாட்டு நிறுவனமான ஒ.என்.ஜி.சி விதேஷ், கிழக்கு ரஷ்யாவின் சாகலின்-1 எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 20 சதவிகித பங்குகளை வாங்கிய போது தான் இந்தியா ரஷ்யாவுக்குள் நுழைந்தது. இதற்கு பின்னர் சைபீரியாவில் உள்ள வான்கோர் எண்ணெய் வயலிலும் பங்கு உள்ளது. இதே இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அதன் பங்கு நிறுவனங்களும் தனித்தனியாக 29.9 சதவிகித பங்குகளை வைத்துள்ளன என்றும் கூறியுள்ளார். இதே கடந்த 2017ம் ஆண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் எஸார் ஆயிலை 12.9 பில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு, இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பந்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+