இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்றான ஐசிஐசிஐ தனது வங்கியியல் சேவையை மேம்படுத்த பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைந்த சேவைகளை ஐசிஐசிஐ வங்கிக்கு உருவாக்கி கொடுக்க விப்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ் உடன் போட்டி போட்டு வரும் விப்ரோ நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கியின் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
300 மில்லியன் டாலர்
விப்ரோ - ஐசிஐசிஐ வங்கி இடையில் நடந்துள்ள இந்த ஒப்பந்தம் 7 வருட காலத்திற்கானது என்றும், இதன் மதிப்பு 300 மில்லியன் டாலர் என்றும் மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கிக்கு டிஜிட்டல் சேவை அளித்து வரும் வாரா இன்போடெக் நிறுவனத்தால் இச்சேவையைச் சரிவர அளிக்க முடியாத நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் விப்ரோ நிறுவனத்திற்குக் கைமாறியுள்ளது.
321 கோடி ரூபாய்
ஐசிஐசிஐ வங்கி மற்றும் விப்ரோ நிறுவனங்கள் மத்தியில் நடைபெற்றுள்ள ஒப்பந்தம் மூலம் வாரா இன்போடெக் நிறுவனத்தின் 3800 ஊழியர்கள், இந்நிறுவனம் செயல்பட்டு வரும் பிராஜெக்ட்கள், அனைத்து சேவைகளையும், 321 கோடி ரூபாய்க்கு விப்ரோ வாங்கியுள்ளது.
இணை நிறுவனம்
இதன் மூலம் இனி வாரா இன்போடெக் விப்ரோ நிறுவனத்தின் இணை நிறுவனமாகச் செயல்பட உள்ளது. இந்த இணைப்பு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.221.5 கோடி வருவாய்
மேலும் வாரா இன்போடெக் தற்போது அளித்து வரும் வங்கி சேவைகள் மூலம் 2019ஆம் நிதியாண்டில் சுமார் 221.5 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் சரி வர தெரியாமல் இருக்கும் நிலையில் வாரா இன்போடெக் நிறுவனத்தை 321 கோடி ரூபாய்க்கு விப்ரோ வாங்கியுள்ளது.
இந்த நிறுவன கைப்பற்றலின் மூலம் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் முக்கிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications