நான் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.. ப சிதம்பரம் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் பின்னர், இந்த தீர்ப்பை பற்றி எதுவும் சொல்லாத நிலையில், ப சிதம்பரம் " நான் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே கவலைப் படுகிறேன்" என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

நான் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.. ப சிதம்பரம் அதிரடி!

மேலும் ஐந்து சதவிகிதம் என்றால் என்ன? உங்களுக்கு 5% நியாபகம் இருக்கிறதா என்ற கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்துள்ளாராம். மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சரிந்த பின்னர், அவர் அரசை இவ்வாறு கேலி செய்தார். அதோடு பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் 5 சதவிகிதமாக இருந்ததாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 8 சதவிகிதமாக இருந்ததையும் குறிபிட்டுள்ளார்.

தான் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையும் மீறி ப சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பது பற்றி பலர் பல்வேறு விதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீட்டை பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக, கடந்த 2017ம் ஆண்டிலேயே சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இவரின் மீது பல வழக்குகள் இருந்தாலும், அவற்றிற்கெல்லாம் ஜாமீன் கிடைத்தும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் மீண்டும், திகார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.. அச்சத்தில் மற்ற நிறுவனங்கள்!ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.. அச்சத்தில் மற்ற நிறுவனங்கள்!

பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு ஆளானவர்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகள், தான் இவருக்கும் பின்பற்றப்படும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம். மேலும் சிதம்பரம், மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதோடு சிறையில் தனியறை, மேற்கத்திய கழிவறை தவிர வேறு எந்தச் தனி சிறப்பு வசதிகளும் அவருக்குச் செய்து தரப்படவில்லையாம்.

மேலும் எல்லாக் கைதிகளையும்போல சிதம்பரமும் சிறை நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும், குறிப்பிட்ட நேரத்துக்கு தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதிக்கப்படுவாராம். அதே போல சிறையில் அவருக்கு வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வேண்டுமென்றால் நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியுடன் வேறு உணவை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P Chidambaram said i am only worried about Economy

Summary; when CBI court sent him to judicial custody till 19 September in the INX Media case.Former finance minister p Chidambaram said i worried about only economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X