மும்பை: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் யார் எனக் கேட்டால் முகேஷ் அம்பானி என பிறந்த குழந்தை கூடச் சொல்லும். அதே போல இந்தியாவின் பொருளாதார நிலை பற்றிக் கேட்டாலும் மிக மோசமாக இருக்கிறது எனச் சொல்லும்.
அந்த அளவுக்கு பொருளாதார மந்த நிலை இந்திய நாட்டையே பிடித்து உலுக்கிக் கொண்டு இருக்கிறது. எந்த பக்கம் பார்த்தாலும் நட்டம், வேலை இழப்பு, சொத்து மதிப்பு சரிவு என கதறுகிறார்கள்.
இப்போது இந்த பட்டியலில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி கூட இடம் பிடித்து இருக்கிறார் என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சியால், பயங்கர வருத்தத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி.
கடந்த ஒரு வருடத்தில்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை கடந்த 25 அக்டோபர் 2018 அன்று 1,016 என்கிற 52 வார இறக்க விலையைத் தொட்டது. அதன் பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்கைகள், ஆண்டுப் பொதுக் கூட்டம், முகேஷ் அம்பானியின் சில அதிரடி முடிவுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த முறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் சுமார் 40 சதவிகிதம் வரை எகிறியது.
40 % வளர்ச்சியா..?
ஆம் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அதுவும் அடுத்த ஏழே மாதங்களில் இந்த அசுர வளர்ச்சி கண்டு இருக்கிறது. 03 மே 2019 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை தன் வாழ் நாள் உச்சமான 1,416 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாராக 8.9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது.
நட்டம்
ஆனால் இப்போது அதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.7 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஆக 1.2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தன் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறது. சமீபத்தில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்துக்கு விற்று தன் கடன்களை அடைக்க இருப்பதாகச் செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அம்பானி குடும்பம்
எனவே, இப்படி பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு விற்கும் நேரத்தில், தன் நிறுவனத்தின் பங்கு விலையில் ஒரு பெரிய சரிவு ஏற்படுவதை யார் தான் விரும்புவார்கள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியை ஒரு தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் முகேஷ் அம்பானி வருத்தப்படுகிறார் என்று மட்டும் பார்க்க வேண்டாம். ஒரு வியாபார ரீதியிலான காரணம் இருப்பது போல சில சொந்த காரணங்களும் இருக்கிறதாம்.
சொந்த காரணங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலா பென் பெயரில் 1.46 கோடி பங்குகள், முகேஷ் அம்பானியின் பெயரில் 72 லட்சம் பங்குகள் இருக்கிறதாம். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 67.9 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார். அதே போல முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி தலா 67 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார்கள். மற்றொரு மகனான ஆனந்த் அம்பானி பெயரில் 2 லட்சம் பங்குகள் இருக்கிறதாம்.
எனவே வருத்தம் கொஞ்சம் பலமாக இருக்கிறதாம். இந்திய நாட்டின் மிகப் பெரிய பணக்காரருக்கே 1.2 லட்சம் கோடி சொத்து மதிப்பு சரிவு என்றால் சாமானியனின் கதி..?
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications