மிரட்டிய பெண்ணுக்கே மீண்டும் வேலை..! பேடிஎம் நிறுவனத்தின் சோனியா தவான்..!

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்று பேடிஎம். இந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மாவின் உதவியாளராக இருந்த சோனியா தவான் தற்போது மீண்டும் பேடிஎம் குழும நிறுவனத்திலேயே ஒரு பெரிய பதவியில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறாராம்.

சில மாதங்களுக்கு முன்பு தான் பேடிஎம் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மாவிடம் 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக சோனியா தவான் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது சோனியா தவான் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கேமிங் பிரிவான கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனத்தில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் துணைத் தலைவராக பணியில் சேர்ந்து இருக்கிறாராம்.

மிரட்டிய பெண்ணுக்கே மீண்டும் வேலை..! பேடிஎம் நிறுவனத்தின் சோனியா தவான்..!

கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனம் ஏ ஜி டெக் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் சேர்ந்து தொடங்கிய ஜாயிண்ட் வெஞ்சர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா தவான் கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனத்தில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு சுமார் 10 ஆண்டுகளாக மார்க்கெட்டிங், மக்கள் தொடர்புத் துறை, கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பல துறைகளில் வேலை செய்த அனுபவம் கொண்டவர். இவர் பேடிஎம் நிறுவனத்தின் பிராண்டை உயர்த்துவதற்கும் பெரிய அளவில் உழைத்து இருக்கிறார் என கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவன தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள்.

சோனியா தவான் உடன் கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனத்தில் ஃபயஸ் ஹுசயிஸ் மற்றும் ஹர்சித் கசிவ் ஆகியோர்களும் இணைந்து இருக்கிறார்களாம். ஃபயஸ் ஹுசையிஸ் கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனத்தின் வளர்ச்சித் தலைவராகவும், ஹர்சித் கசிவ் ப்ராடெக்ட் மார்க்கெட்டிங்-ன் தலைவராகவும் பொறுப்பேற்று இருக்கிறார்களாம்.

ஃபயஸ் ஹுசையிஸ் சுமார் 19 வருட பணி அனுபவத்துடன் கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனத்துக்கு வருகிறார். இவர் உடோபியா, மிக்மீ, ஐபிபோ, இந்தியா டைம்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதே போல ஹர்சித் கசிவ் கேம்பிண்ட் எண்டர்டெயின்மெண்ட் (Gamepind Entertainment) நிறுவனத்தில் இணைவதற்கு முன் ட்ரீம் 11 என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+