ஏர் இந்தியாவுக்கு கருணை காட்டிய எண்ணெய் நிறுவனங்கள்.. மீண்டும் எரிபொருள் சப்ளை தொடக்கம்!

டெல்லி : போதிய எரிபொருள் இல்லாததால் தனது சர்வதேச விமான சேவையை நிறுத்தி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா. பணத்தை கொடு எரிபொருளை தர்றோம் என்று கறாராக நின்ற எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் சப்ளை நிறுத்தின.

இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இதனால் தற்போது பேச்சு வார்த்தையில் சுமூக நிலை ஏற்படவே, தற்போது கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்து எண்ணெய் சப்ளையை மீண்டும் தொடங்கியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன்

எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன்

இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான சுமார் 5,000 கோடி மதிப்பிலான கடன் தொகையை ஏர் இந்தியா செலுத்தவில்லை என்றும், இதனால் ஏர் இந்தியாவின் ஆறு விமான தளங்களுக்கு எண்ணெய் சப்ளையினை நிறுத்தின. குறிப்பாக கொச்சின், மொஹாலி, பூனே, பாட்னா, ராஞ்சி, மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட விமான தளங்களுக்கு எரிபொருளை கடந்த ஆகஸ்ட் 22 அன்று நிறுத்தியது.

மேலும் இரண்டு தளங்களுக்கு வழங்க முடியாது

மேலும் இரண்டு தளங்களுக்கு வழங்க முடியாது

இந்த நிலையில் முக்கிய தளங்களான ஹைதராபாத் மற்றும் ரெய்ப்பூர், விமான தளங்களுக்கு எண்ணெய் வழங்க முடியாது என்றும் ஒரு கட்டத்தில் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்தன. அதிலும் நிலுவையில் உள்ள தொகையினை வட்டியுடன் சேர்த்து விரைவில் செலுத்த வேண்டும், இல்லையெனில் ஹைதாராபாத் மற்றும் ரெய்ப்பூர் விமான நிலையங்களுக்கும் செப்டம்பர் 6 முதல் எண்ணெய் சப்ளையை நிறுத்தி வைக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தன.

அதிகப்படியான நிலுவை

அதிகப்படியான நிலுவை

கடந்த ஆகஸ்ட் 22லிருந்தே, அதிகப்படியான நிலுவை காரணமாக, இந்தியன் ஆயில் கார்ப், மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்களுக்கு, பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா செலுத்த வேண்டிய 5,000 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும், செலுத்தினால் தான் எண்ணெய் சப்ளை என்றும் கூறி வந்த நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் சப்ளையை தொடங்கியுள்ளன.

தினசரி தேவை

தினசரி தேவை

ஏர் இந்தியா இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு 90 நாட்களில் செலுத்த வேண்டிய எண்ணெய் சப்ளைக்கான தொகையினை, 230 நாட்கள் இழுபறியில் வைத்ததால் தான் இப்பிரச்சனையே என்றும், இந்த ஆறு விமான தளங்களுக்கான ஏர் இந்தியாவின் எரிபொருள் அளவு தினசரி சுமார் 250 கிலோலிட்டர் ATF என்றும் கூறியுள்ளது. இதனால் இனி வழக்கம் போல ஏர் இந்தியா செயல்படும் என்றும் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+