தொடர்ந்து59 நாட்கள் விடுமுறை.. கதறும் அசோக் லேலண்ட்பணியாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி அனைவரும் அறிந்த விஷயமே என்றாலும், இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

அதிலும் சென்னை சேர்ந்த ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பெரும் பின்னடைவை கண்டுள்ளது.

அதிலும் தனது 5 ஆலைகளுக்கு 59 நாட்கள் கட்டாய விடுமுறை அளித்துள்ளது என்றும் ஸ்டாக் எக்சேஞ்ச்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை

அதிலும் குறிப்பாக ஏற்கனவே விடுமுறை அளித்துள்ள எண்ணூர் ஆலைக்கு மீண்டும் விடுமுறையை அளித்துள்ளதோடு, தற்போது மேலும் பல ஆலைகளுக்கும் சேர்த்து விடுமுறை அளித்துள்ளது அசோக் லேலண்ட் நிறுவனம். குறிப்பாக தனது எண்ணூர் ஆலைக்கு 16 நாட்கள் விடுமுறை என்றும், ஓசூர் 1 மற்றும் 2வது ஆலைகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறையும், ஆல்வார் மற்றும் பந்தாரா ஆலைகளுக்கு 10 நாட்கள் விடுமுறையும், அதிகபட்சமாக பந்த் நகாரில் 18 நாட்கள் விடுமுறையும் அளித்துள்ளது.

மொத்த விற்பனையில் சரிவு

மொத்த விற்பனையில் சரிவு

இந்த நிறுவனம் தனது மொத்த விற்பனையிலேயே 28 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், மொத்தம் வெறும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், முன்னதாக கடந்த ஆண்டு இதே காலத்தில் 15,199 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உள் நாட்டு விற்பனையும் 29 சதவிகிதம் சரிந்து 10,101 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,205 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கயும் வீழ்ச்சி தான்

இங்கயும் வீழ்ச்சி தான்

இதே சிறிய கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 41 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இது வெறும் 6,018 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டில் 10,152 வாகனங்களை விற்பனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதே லைட் கமர்ஷியல் வாகன விற்பனையானது கடந்த ஜூலை 2019ல் 4,083 வாகனங்கள் எனவும், இது முந்தைய ஆண்டில் 4,053 எனவும் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களின் நிலை என்ன?

ஊழியர்களின் நிலை என்ன?

இந்த நிறுவனத்தின் இந்த கட்டாய விடுமுறையால் சம்பள இழப்பு என இருக்கலாம் எனவும், இதை நம்பி இருக்கும் ஊழியர்களின் நிலை பரிதாபக்குரியது தான், ஆனால் என்ன செய்வது நிறுவனத்தின் நிலை அதைவிட மோசமாக உள்ளதே என்றும், இத்துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது, இதுவே பல நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பிய நிலையில், இது எவ்வளவோ பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தம் ஆட்டோமொபைல் ஊழியர்களுக்கு இது போதாதா காலம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ashok Leyland announced to shutdown five plants again coming week

Ashok Leyland reported to stock exchange that they are planning to shutdown 5 plants again coming week . Also it was reported that 28% total sales down in july month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X