காக்னிசென்ட் செய்யும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. பீதியில் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் முன்னிலையில் நடந்த ஒரு முக்கியமான கூட்டத்தில் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

இது அதிரடி நடவடிக்கை அக்டோபர் மாதத்திலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகவும் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ Brian Humphries தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

காக்னிசென்ட் நிறுவனத்தின் நியூயார்க் தலைமை அலுவவகத்தில் இந்நிறுவனத்தின் 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, Brian Humphries முதலீட்டாளர்களிடம் 20 வருடங்களாகக் காக்னிசென்ட் வளர்ச்சிப் பாதையிலிருந்தாலும் கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் வளர்ச்சி பெரிய அளவில் பாதித்துள்ளது.

 செலவு குறைப்பு

செலவு குறைப்பு

இந்நிலையில் முக்கியமான துறையில் முதலீடு அதிகரிக்கவும், மற்ற துறைகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் மற்றும் ஊழியர்களின் வேலை திறனில் ‘fit-for-growth' அடிப்படையில் நிறுவனத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நிர்வாகம் செலவு செய்யும் தொகை பெரிய அளவில் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

தேவையற்றது
 

தேவையற்றது

இதோடு 20 வருடமாக நாம் ஓரே வீட்டில் வாழ்ந்து வந்தால், பல விஷயங்கள் நமக்குத் தேவையற்றதாக இருக்கும், ஆனாலும் அதை நாம் வீட்டிலேயே வைத்திருப்போம். வீடு என்பதால் அது பிரச்சனையில்லை, நிறுவனம் வர்த்தகம் என வரும் போது புதிய பார்வை, புதிய திறமைகள் நிச்சயம் அவசியம். எனவே தான் தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

மேலும் இந்த மறு சீரமைப்பில் சில நூறு ஊழியர்களை மட்டும் நீக்குவது எனது விருப்பம் இல்லை, அதேபோல் இந்தப் பணியை 3 அல்லது 6 மாத காலமோ நீட்டிக்கவும் விருப்பம் இல்லை என Brian Humphries திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்து பணிகளையும் வருகிற அக்டோபர் மாதத்தின் துவக்கத்திலேயே துவக்க காக்னிசென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

காக்னிசென்ட் நிறுவனம் சமீபத்தில் பல முக்கியமான பிராஜெக்ட்களை டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்திடம் இழந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் காக்னிசென்ட் நிறுவனத்திடம் சரியான விலை நிலை இல்லை என்பதே வாடிக்கையாளர்கள் மத்தியில் கருத்தாக இருந்துள்ளது. இதைச் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டுள்ள Brian Humphries காக்னிசென்ட் ஊழியர்கள் மத்தியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Layoff at Cognizant, CEO plans in very big way: CTS employees at Shock

Cognizant could see a slew of job cuts as early as end-October, CEO Brian Humphries indicated at an investor event in New York, to ensure that the ongoing restructuring at the company does not drag out over time. “I do not believe in death by a thousand cuts, I would rather pull the Band-Aid off Humphries said.
Story first published: Monday, September 9, 2019, 8:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X