சம்பள உயர்வுக்காக போராட்டம்..! பல விமானங்கள் ரத்து..!

லண்டன்: பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிரிட்டீஷ் ஏர்லைன் விமானிகள் சங்கம் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு கடந்த மாதமே நோட்டீஸ் கொடுத்தது. இது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவன வரலாற்றிலேயே முதல் முறையாக நடக்கும் வேலை நிறுத்தம் எனச் சொல்கிறார்கள். வேலை நிறுத்தத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் 09, 10 ஆகிய தேதிகளிலும், அடுத்த கட்டமாக செப்டம்பர் 27-ம் தேதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறார்களாம்.

பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தில் கொஞ்சம் கூடுதலாக விமானிகளுக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்டு (சுருக்கமாக சம்பள உயர்வு கேட்டு) பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானிகள் சங்கம் போராட்டத்தில் இறங்கி இருக்கிறது. ஆனால் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவன தரப்போ விடா பிடியாக நிற்கிறது. ஏற்கனவே பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவன விமானிகளுக்கு கொடுக்கும் சம்பளம் மற்றும் லாபப் பகிர்வு எல்லாம் நியாயமானதாகத் தான் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறது.

சம்பள உயர்வுக்காக போராட்டம்..! பல விமானங்கள் ரத்து..!

ஆனால் விமானிகள் சங்கமோ ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் இன்று மற்றும் நாளை பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தில், பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானங்களைப் பிடிக்கும் வேலையில் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் "விமானிகளின் பிரச்னையை தீர்க்க செய்யும் செலவை விட, வேலை நிறுத்தம் மூலம் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டம் அதிகமாக இருக்கும்" எனச் சொல்லி இருக்கிறார்கள் விமானிகள் சங்கத்தினர்கள்.

இப்போது மீண்டும் விமானிகளுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். கடந்த வியாழக்கிழமை பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானிகள் சங்கம் முன் வைத்த தீர்வுகளை பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தீர்வை பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று வேலை நிறுத்தம் நடந்தே இருக்காது எனவும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானிகள் சங்கத்தினர் சொல்கிறார்கள்.

இங்கிலாந்தின் பெயர் பத்திரிகைகளில் அடிபடுவதைப் பார்த்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சனே தலையிட்டு பிரச்னையை விரைவில் தீர்த்துக் கொள்ளச் சொல்லி இருக்கிறாராம். இப்போது ரத்தான பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானங்களுக்கு பதிலாக மாற்று விமானங்களை ஏற்பாடு செய்து கொடுப்பது அல்லது விமான பயணக் கட்டணங்களைத் திருப்பிக் கொடுப்பது போன்ற வேலைகளில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டு இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+