மோடி அரசின் முதல் 100 நாட்களில் லாபம் கண்டவர்கள்.. யாரந்த அதிர்ஷ்டசாலிகள்!

டெல்லி : மோடி 2.0 அரசில் பல ஆயிரம் பேர் தங்களது முதலீடுகளில் லாபம் கண்டாலும், பல லட்சம் பேர் தங்களது முதலீடுகளை இழந்தார்கள் என்பதே உண்மை.

அதிலும் இலாபம் கண்டவர்கள் அதிக பட்சம் 48 சதவிகிதம் மட்டுமே இலாபத்தை பார்த்தனர். ஆனால் இழப்பு என்பது கிட்டதட்ட 84 சதவிகிதம் வரை இருந்தது. இதுவே நிசப்தமான உண்மை.

ஒரு புறம் மோசமான பொருளாதார சூழ்நிலை, ரூபாய் வீக்கம், சரிந்து வரும் அன்னிய முதலீடு, அழையா விருந்தாளிகளை போல வெளியேறும் அன்னிய முதலீடுகள் என முதல் நூறு நாட்கள் மிக சாதனை மிகுந்த நாட்களாக இருந்துள்ளது என்றே கருதலாம்.

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே

ஒரு புறம் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தலால் தெருவைப் பொறுத்தவரை பெருத்த அடியாகவே கருதலாம். மொத்தத்தில் மோடி அரசின் முதல் நூறு நாட்கள், முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் நாட்களாகவே அமைந்துவிட்டது. மோடி 2.0 அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, ஆரம்பத்தில் இனி நல்லா காலம் என்று நினைத்து என்று முதலீடு செய்தவர்கள், 14 லட்சம் கோடி முதலீட்டாளர்களின் கனவை உடைத் தெறிந்துவிட்டது என்றே கூறலாம்.

வெறும் 14% லாபம்

வெறும் 14% லாபம்

மோடி 2.0 அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், பி.எஸ்.இயில் வெறும் 14 சதவிகிதம் பங்குகள் மட்டுமே ஏற்றத்தை கண்டன. எனினும் பிஎஸ்.இயில் வர்த்தகமாகும் 2,664 பங்குகளில், 2,290 பங்குகளின் மதிப்பு, 96 சதவிகிதம் மதிப்பை இழந்தன. அதில் 422 பேருக்கும் மேல் 40 சதவிகிதத்தினையும், 1,371 பேர் 20 சதவிகிதத்திற்கும் மேல், 1,872 பேர் 10 சதவிகிதத்திற்கு மேலும் தங்களது சந்தை மதிப்பினை இழந்துள்ளனர்.

ரூ.14 லட்சம் கோடி இழப்பு

ரூ.14 லட்சம் கோடி இழப்பு

ஆக பிரதமர் பதவியேற்ற மே 30ல் இருந்து, செப்டம்பர் 6ம் தேதி வரையிலான நூறு நாட்களில், மும்பை பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டிருந்த பங்குகளின் மதிப்பு 14.15 லட்சம் கோடி ரூபாய் சரிந்து, 140 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான நிறுவனங்கள் வெறும் நஷ்டத்தை மட்டுமே கண்டுள்ள நிலையில், செராமிக் அன்ட் கிரானைட் நிறுவனமான ஹெச்.எஸ்.ஐ. எல் அதிகபட்சமாக கிட்டதட்ட 84 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. மே30 அன்று 288 ரூபாயாக இருந்த, இந்த பங்கின் விலை, கடந்த செப்டம்பர் 6 அன்று, வெறும் 47 ரூபாயாக மட்டுமே இருந்தது கவனிக்கதக்கது.

நஷ்டம் கண்ட பங்குகள்

நஷ்டம் கண்ட பங்குகள்

இதே காஃபி டே, ஜெட் ஏர்வேர்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், இந்தியாபுல்ஸ் இண்டகிரட்டேடு சர்வீசஸ், சிஜி பவர், ஜெயின் இரிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வோடபோன் ஐடியா, இந்த பங்குகளின் குறைபட்ச நஷ்டம் 60 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.

இது தான் ஏற்றம் கண்ட பங்குகள்

இது தான் ஏற்றம் கண்ட பங்குகள்

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி டாப் கெயினராகவும் 48.53 சதவிகிதமாகவும், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப், zydes wellness, அப்பல்லோ ஹாஸ்பிட்டல், அப்போட் இந்தியா, எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், டிரென்ட் உள்ளிட்ட பங்குகள் லாபத்துடனும் இருந்துள்ளன.

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், மோடி 2.0 அரசு பதவியேற்ற முதல் நூறு நாட்களில் மட்டும் சுமார் 31,700 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. இதே கடந்த பிப்ரவரி - மே மாதங்களில் 83,000 கோடி ரூபாய் வரத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+