மோடி கடந்த மே 30, 2019 அன்று மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்து கடந்த செப்டம்பர் 06, 2019 உடன் 100 நாட்கள் ஆகிறது.
இந்த 100 நாட்களில் என்ன எல்லாம் சாதித்தார் தெரியுமா என பல்வேறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பூ மழைத் தூவி பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் காங்கிரஸ் தரப்பினரோ இதெல்லாம் ஒரு சாதனையா..? இதை எப்படி அவர்கள் சாதனை எனச் சொல்லிக் கொள்கிறார்கள் என கிடுக்கிப் பிடி கேள்விகளை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் எழுப்பி வருகிறார்கள்.

அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் இந்தியாவின் சட்ட வல்லுநர்களில் ஒருவரான கபில் சிபல் இன்று தன் ட்விட்டில் மோடி 2.0 ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என 7 விஷயங்களை பட்டியல் போட்டு இருக்கிறார்.
1. சென்செக்ஸ் மே 23 அன்று சுமார் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் நேற்றைய கணக்குப்படி சுமாராக 37,150 புள்ளிகளில் நிறைவு அடைந்து இருக்கிறது.
2. அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடுகளை கடந்த ஜூன் மற்றும் ஜூலை 2019-ல் விற்று வெளியேறி இருக்கிறார்கள்.
3. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மே 2019-ல் சுமாராக 69 ரூபாய்க்கு இருந்தது. ஆனால் இப்போது சுமாராக 72 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
4. இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு 23.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
5. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. 100 பேரில் 8.2 பேர் வேலை இல்லாமல் திண்டாடுபவர்களாக இருக்கிறார்கள்.
6. அரசைக் காப்பாற்ற மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாயை வாங்கிக் கொண்டார்கள்.
7. சரித்திரப் புகழ் பெற்ற ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் மற்ற வருவாய்கள் எல்லாம் பலத்த சரிவில் இருக்கிறது.
என வெளிப்படையாக ட்விட்டித் தள்ளி இருக்கிறார் கபில் சிபல்.


Click it and Unblock the Notifications