99 ரூபாய்க்கு களம் இறங்கும் ஆப்பிள்..! தெறித்து ஓடும் நெட்ஃப்ளிக்ஸ் & அமேஸான்..!

நேற்று தான் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐ ஃபோன் 11 மற்றும் ஐ ஃபோன் 11 ப்ரோவை அறிமுகப்படுத்தியது.

அதோடு இந்தியாவில் ஆழமாக கால் பதிக்க இன்னும் சில விஷயங்களையும் செய்ய இருப்பதாகச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது ஆப்பிள்.

ஆப்பிள் நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இறங்க இருக்கும் களம் எது தெரியுமா..? இந்தியாவின் வீடியோ ஸ்ட்ரீமிங் துறை..! ஆம் அமேஸான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், ஜியோ டிவி போன்றவர்கள் வியாபாரம் பார்க்கும் அதே வீடியோ ஸ்ட்ரீமிங் துறை.

போட்டி

போட்டி

இந்தியாவில் பொழுது போக்குத் துறை நாளுக்கு நாள் பெரிய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. முதலில் டிவி சேனல்கள் மற்றும் கேபில் நிறுவனங்களுக்கு ஆப்படிக்கும் விதத்தில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேஸான் போன்றவர்கள் தங்களின் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கினார்கள். அதன் பின் இலவசமாக ஜியோ டிவி வந்து ஏற்கனவே இருந்த இரண்டு நிறுவனத்துக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.

ஆப்பிள்

ஆப்பிள்

இப்போது இன்னொரு பெரிய போட்டியாளராக ஆப்பிளும் இந்திய பொழுது போக்கு சந்தையில் கால் பதிக்கப் போகிறதாம். மாதம் 99 ரூபாய் செலுத்தினால் போதும் தரமான ஒரிஜினல் வீடியோக்களை ஆப்பிள் டிவி+ சேவையில் காணலாம் என்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த 99 ரூபாய் விலையினாலும் ஆப்பிள் என்கிற பிராண்ட் பெயராலும் அதிக போட்டிகள் நிறைந்த இந்திய சந்தையில் கணிசமான அளவில் வாடிக்கையாளர்களை இழுக்க முடியும் என்கிறார்கள்.

ஆப்பிளுக்கு ஃப்ரீ

ஆப்பிளுக்கு ஃப்ரீ

குறிப்பாக ஆப்பிள் சாதனங்களான ஐ ஃபோன், ஐ பாட், மேக் புக் போன்றவைகளை வாங்கினால் அடுத்த ஒரு வருடத்துக்கு இந்த ஆப்பிள்+ சேவையை இலவசமாகப் பெற முடியுமாம். சுருக்கமாக, இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் ஜியோவுக்கும், உலக நாடுகள் முழுவதும் தன் சாதனங்களை விற்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் இடையில் தான் இனி கடுமையான போட்டி நிலவும் எனச் சொன்னால் அது மிகையில்லை.

அறிக்கை

அறிக்கை

கே பி எம் ஜி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், இந்தியாவில், ஒருவர், நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 நிமிடத்தை ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்துகிறாராம். வரும் 2023 நிதி ஆண்டுக்குள் இந்தியாவில் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடும் என்கிறார்கள். அப்போதும் உலக அரங்கில் இந்தியா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கும் எனச் சொல்கிறது கே பி எம் ஜி அறிக்கை. ஏற்கனவே ஒரு வீடியோ ஸ்ட்ரீங் நிறுவனத்தில் மட்டும் சுமார் 155 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் எனவும் சொல்கிறது கே பி எம் ஜி அறிக்கை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+