நுகர்வோர் விலை குறியீட்டு எண், விலைவாசிகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் முந்தைய மாதத்தை விட, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக கோடாக் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காய்கறி, பழங்கள் உட்பட உணவு, உடை, எரிபொருள் ஆகிய முக்கிய பொருட்களின் விலைவாசியை குறிக்கும் பணவீக்க குறியீட்டை மத்திய அரசு மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குறியீடானது, இந்த விலை அதிகரித்துள்ள நிலையில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இது உயரும் என்றும், இது கடந்த ஜுலை மாதத்தில் 3.15 சதவிகிதமாக இருந்தது என்றும், இது ஆகஸ்ட் மாதத்தில் 3.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கோடாக் ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு பணவீக்கத்தை 4 சதவிகிதத்திற்குள் தான் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தற்போது ஆக்ஸ்ட் மாத மதிப்பீடும் இதற்கு கீழ் இருப்பதாகக் தான் மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே தொழில்துறை உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 2.3 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய மாதத்தில் 2 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 7 சதவிகிதமாக இருந்ததாகவும், இது நடப்பு ஆண்டில் குறைந்தற்கு காரணம், சுரங்கம் மற்றும் உற்பத்தி குறைந்ததே என்றும், குறிப்பாக கடந்த ஜீன் மாதத்தில் முதன்மை பொருட்களின் உற்பத்தி 0.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது என்றும், இது முந்தைய ஆண்டு 9.2 சதவிகிதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி கடந்த முதல் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இது குறிப்பாக கட்டுமானம், விவசாயம், மற்றும் உற்பத்தி உள்ளிட்டவற்றின் பலவீனமான தேவையால் குறைந்தது என்றும், உலகளாவிய சூழ்நிலையால், தேவை குறைந்து வருவதால் இந்திய பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் உற்பத்தியின் மந்த நிலையானது மூலதனம் மற்றும் இடைநிலை பொருட்களின் வளர்ச்சியை மேலும் பலவீனப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications