பெங்களூரு: இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சிஸ்டம் நிறுவனங்களில் பேடிஎம்-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்.
சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் நிதி ஆண்டு முடிவுகள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் வெளியானது. அந்த நிதி நிலை அறிக்கைகள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் படிப் பார்த்தால் 2018 - 19 நிதி ஆண்டில் மொத்தம் 4,217 கோடி ரூபாய் நஷ்டம் கண்டிருக்கிறது பேடிஎம் நிறுவனம்.
என்ன காரணம், ஏன் பேடிஎம் நிறுவனத்தின் நஷ்டம் இப்படி தாறு மாறாக அதிகரித்து இருக்கிறது..? ஏன் ஒரே வருடத்தில் 300 % நஷ்டம் அதிகரித்து இருக்கிறது..? இதற்கு எல்லாம் அவர்களே விடை கொடுத்து இருக்கிறார்கள்.
300 % நஷ்டம்
பேடிஎம் நிறுவனத்தின் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் நஷ்டம் 4,217 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் 1,604 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி நஷ்டம் சுமாராக 300 சதவிகிதம் அதிகரிப்பதற்கு என்ன காரணம் என அவர்களே விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
செலவு அதிகம்
கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 3,309 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 8.2 சதவிகிதம் அதிகரித்து 3,579 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் செலவு 4,864 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் செலவீனங்கள் 7,730 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக செலவீனங்கள் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
எதற்கு செலவு
பேடிஎம் நிறுவனம் தன்னுடைய பிராண்டின் பெயரை மக்கள் மத்தியில் இன்னும் பெரிதாக பதிய வைக்க பெரிய அளவில் செலவு செய்து இருக்கிறார்களாம். அது போக பல்வேறு முதலீடுகள் மற்றும் அன்றாட செயல்பாட்டு செலவீனங்களையும் செய்து இருக்கிறார்களாம். அதனால் தான் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் செலவீனங்கள் சுமாராக 60 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
எதிர்காலம்
இப்போதே பேடிஎம் நிறுவனம் தன்னுடைய பேமெண்ட் வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தரகுப் பணி, பயணச் சீட்டு புக் செய்வது, ஹோட்டல்கள் மற்றும் மொபைல் வேலட் சேவைகள் போன்ற பல்வேறு வியாபாரங்களில் தங்கள் இடத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இந்த வியாபாரங்களில் இருந்து இன்னும் நிறைய வருவாய் வரும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
மதிப்பு
கடந்த மாதம் தான் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பீடுகள் சுமாராக 25 சதவிகிதம் அதிகரித்து 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறி இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு முன்பு 2020 - 2021 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனம் சுமார் 200 கோடி லாபம் பார்க்கலாம் என்றும், வரும் 2026 நிதி ஆண்டில் சுமார் 8,512 கோடி லாபம் பார்க்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகி இருப்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications