இதெற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது.. எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெர்ம் இன்சூரன்ஸ்களை பொறுத்த வரை மிகச் சிறந்த முதலீடுகளாகவே பலர் காப்பீடு செய்கின்றனர். ஏனெனில் குறைந்த காப்பீட்டில் பெரிய அளவில் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

அதிலும் மாதம் 500 - 600 ரூபாய் வரை செலுத்தினாலே 1 கோடி ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். ஆனால் கஷ்டப்பட்டு, இப்படி பாலிசி போடும் நாம், கடைசி நேரத்தில் சில விஷயங்களுக்காக க்ளைம் செய்ய முடியாமல் போகும். ஆக ஒரு பாலிசி எடுக்கும் முன், அந்த பாலிசி தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதெற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது.. எச்சரிக்கை!

 

அதோடு பாலிசி எடுக்கும் முன்னரே, பாலிசிக்கு கொடுக்கப்படும் அனைத்து தகவல்களும் உண்மையானதாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒரு சிறு விஷயத்தால் கூட, நமது பாலிசிகள் க்ளைம் செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.

அந்த வகையில் சில காரணங்களுக்காக நாம் க்ளைம் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறப்படும், சில விஷயங்களைத் தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

முதலாவதாக ஒரு வேளை பாலிசி உரிமையாளார் கொலை செய்யப்பட்டால், அதில் நாமினியாக உள்ளவர், இதில் ஈடுபட்டுள்ளதாக தெரிந்தால், பாலிசி க்ளைம் செய்ய முடியாமலேயே போய்விடும். அதில் பாலிசிதாரர் ஈடுபடவில்லை என்றும் நிருபிக்கப்படும் வரை க்ளைம் செய்ய முடியாது.

பாலிசிதாரர் மரணம் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிந்தால், அதற்கும் க்ளைம் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.

பாலிசிதாரர் இறப்பு மது உள்ளிட்ட ஆல்ஹாலினால் என்று தெரிய வரும் போது, இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது. இன்றைய நாளில் பலர் செய்யும் தவறே இது தான்.

அதே போல ஒரு நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், அதை பாலிசி எடுக்கும் முன்பாகவே கூறிவிட வேண்டும். ஒரு வேளை நீங்கள் இதனால் இறக்க நேரிட்டால், அப்போது உங்கள் பாலிசி க்ளைம் செய்ய முடியாமல் கூட போகலாம். பாலிசி எடுத்த பின்பு, இந்த பழக்கத்திற்கு அடிமையானால் அதையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியபடுத்த வேண்டும். ஏனெனில் புகைப்பிடிப்பவர்கள் என்றால், பிரிமியம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பாலிசிதாரார் அபாயகரமான செயலில் ஈடுபடுவதன் மூலம் மரணம் நேரிட்டால் அதற்கும் க்ளைம் செய்ய முடியாது. உதாரணத்திற்கு மலையேற்றம் உள்ளிட்ட சாகசகங்களை செய்யும் போது பாலிசிகளை க்ளைம் செய்ய முடியாது. இதற்கு வேறு வகையான பாலிசிகள் உள்ளது.

இதே பெண்கள் டெலிவரி காலத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் துரதிஷ்டவசமாக இறக்க நேரிட்டால், அவர்களது நாமினிகள் க்ளைம் செய்து கொள்ள முடியாது.

ஒரு வேளை பாலிசிதாரர்கள் தற்கொலை செய்து கொண்டால் முதல் ஆண்டில் க்ளைம் செய்ய முடியாது என்றும், இதே இரண்டாவது ஆண்டில் என்றால், சில நிறுவனங்கள் இதை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்குகின்றன.

இதே இயற்கை பேரிடர் மூலம் இறப்பவர்களுக்கு க்ளைம் செய்ய முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 8 death cases not covered by term life insurance

You must want to know about this.These 8 death cases not covered by term life insurance.
Story first published: Wednesday, September 11, 2019, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X